நீங்கள் ஏற்கனவே ஏதாவது வைட்டமின், தாதுக்கள் அல்லது புரோபயாட்டிக் மாத்திரைகள் அல்லது கேப்சூல்களை எடுத்துக்கொண்டிருக்கிறீர்கள் என்றால், தவறான உட்பொருட்களைக் கொண்டவற்றை எடுத்துக்கொள்வதன் மூலமோ, நீண்டகாலத்திற்கு எடுத்துக்கொள்வதன் மூலமோ அல்லது நீங்கள் ஏற்கனவே எடுத்துக்கொண்டிருக்கிற வேறு மருந்துகளுடன் வினைபுரிவதன் மூலமோ, நீங்கள் உங்களுக்கே எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்திக்கொள்ளவில்லை என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்

பல சந்தர்ப்பங்களில், மற்ற விஷயங்களைப் பற்றி கவலைப்படுவது சரியாக இருக்காது. ஆனால், நீங்கள் உங்களுக்கே எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்திக்கொள்ளவில்லை என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களைப் பார்க்கவும்

நீங்கள் எந்த ஊட்டச்சத்துக்களையாவது துணை உணவுப் பொருட்கள் மூலம் எடுத்துக்கொள்வதற்குத் தீர்மானித்தால், கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களைப் பார்க்கவும். சரியான முறையில் அவற்றைத் தேர்ந்தெடுக்க இவை உங்களுக்கு உதவும்:

 

  • பாதுகாப்பான உட்பொருட்களைக் கொண்டவற்றைத் தேர்ந்தெடுங்கள்

 

பெரும்பாலான துணை உணவுப் பொருட்களைப் பொறுத்தவரையில், பொதுவான உட்பொருட்களைக் கொண்டவை பாதுகாப்பானவையாகும். ஆனால், வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் டி துணை உணவுப் பொருட்களைப் பொறுத்தவரை, மருத்துவர் செயல்நிலையில் இருக்கும் உட்பொருட்களைக் கொண்டவற்றை எடுத்துக்கொள்ள ஆலோசனை கூறினாலொழிய, மற்றபடி செயலிழக்கச் செய்யப்பட்ட நிலையில் இருப்பவற்றைத் தேர்ந்தெடுப்பது முக்கியமானது ஆகும். கீழே கொடுக்கப்பட்டுள்ள அட்டவணையைப் பார்க்கவும் 

ஊட்டச்சத்து செயலிழக்கச் செய்யப்பட்ட நிலையில் உள்ளது

(பாதுகாப்பான நிலையில் உள்ளது)

செயல்நிலையில் உள்ளது

(அதிக அளவில் எடுத்துக்கொள்ளும்போது தீங்கு விளைவிக்கலாம்)

வைட்டமின் ஏ  புரோ வைட்டமின் ஏ அல்லது கரோட்டினாய்டுகள் (.கா. பீட்டா கரோட்டின்) ரெட்டினால் அல்லது ரெட்டினைல் எஸ்டர்கள்
வைட்டமின் டி வைட்டமின் டி2 (எர்கொகால்சிஃபெரால்) அல்லது டி3 (கோலிகால்சிஃபெரால்) கால்சிட்ரையால் அல்லது கால்சிடையால்கள் (25 OH வைட்டமின் டி)

 

  • பாதுகாப்பான மற்றும் போதுமான அளவு:

 

துணை உணவுப் பொருளின் அளவு அந்த ஊட்டச்சத்திற்காக வரையறைக்கப்பட்டுள்ள RDA மற்றும் ULகளுக்கு இடையே இருக்க வேண்டும்

ஊட்டச்சத்தின்RDA (பரிந்துரைக்கப்படும் தினசரி அளவு அல்லது எடுத்துக்கொள்ளும் அளவு) அல்லது DV (தினசரி மதிப்பு) என்பது முறையாக எடுத்துக்கொள்ளப்படும்போது, ஒரு குறிப்பிட்ட கூட்டத்திலுள்ள அனைவரின் உடல் தேவையையும் போதுமான அளவில் சந்திக்கும் அளவாகும்

UL (பாதுகாப்பாக உட்கொள்வதற்கான அதிகபட்ச அளவு) என்பது நம்மில் பெரும்பாலானோர் ஒரு ஊட்டச்சத்தை நீண்ட காலத்திற்குப் பாதுகாப்பாக எடுத்துக்கொள்ளக்கூடிய மற்றும் தீமையான விளைவுகள் எதையும் ஏற்படுத்தாத அளவாகும்

பொதுவாகப் பயன்படுத்தப்படும் துணை உணவுப் பொருட்களின் RDA மற்றும் UL மதிப்புகளை அறிய இந்த அட்டவணையைப் பார்க்கவும்

நீங்கள் சிறிது காலமாக ஏதேனும் துணை உணவுப் பொருட்களை எடுத்துக்கொள்கிறீர்கள் என்றால், அவற்றை நீண்ட காலம் பயன்படுத்துவதால் ஏதாவது பக்கவிளைவுகள் ஏற்படுமா என்பதைப் பார்க்கவும். பொதுவாகப் பயன்படுத்தப்படும் துணை உணவுப் பொருட்களின் நச்சுத்தன்மையை அறிய இந்த அட்டவணையைப் பார்க்கவும்

 

  • மருந்துகள் துணை உணவுப் பொருட்களுடன் புரியும் வினைகள்:

 

சில துணை உணவுப் பொருட்கள் நீங்கள் எடுத்துக்கொள்ளும் மருந்துகளின் மீது தாக்கத்தை ஏற்படுத்தலாம் அல்லது மருந்துகள் துணை உணவுப் பொருட்களின் மீது வினை புரியலாம், இவ்வாறு மருந்துகள் அல்லது துணை உணவுப் பொருட்களின் செயல்திறன் தலைகீழான விளைவுகளை ஏற்படுத்தலாம். இவற்றைப் பற்றி நீங்கள் அறிந்துள்ளதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள், தேவையானால் உங்கள் மருத்துவருடன் கலந்தாலோசியுங்கள்

மருந்துகள் துணை உணவுப் பொருட்களுடன் புரியும் வினைகள் குறித்து அறிய இந்த அட்டவணையைப் பார்க்கவும்

இப்போது இந்தத் தகவல்கள் அனைத்தையும் நீங்கள் அறிந்து கொண்டதால், இந்த நெறிமுறைகளுக்கு உட்படும் ஒரு மாத்திரை அல்லது கேப்சூலைத் தேர்ந்தெடுத்து, அவற்றை பாதுகாப்பாகப் பயன்படுத்தவும்

நீங்கள் எந்த துணை உணவுப் பொருட்களையும் எடுத்துக்கொள்வதில்லை என்றால், உங்களுக்கு ஏதேனும் துணை உணவுப் பொருட்கள் தேவையா என்பதைக் கண்டறிவது நல்லது, ஏனென்றால் இந்தியர்களுக்கு பல வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் குறைபாடு உள்ளது. இதைப் பற்றி அறிய, ‘துணை உணவுப் பொருட்கள்: நீங்கள் எடுத்துக்கொள்ள வேண்டியது ஏதாவதுஉண்டா?’ என்ற கட்டுரையைப் பார்க்கவும்

பார்க்கவும்துணை உணவுப் பொருட்கள் குறித்த பரிந்துரைகளுக்கான எங்கள் மூல ஆவணங்கள்