ஒரு கர்ப்பிணிப் பெண் இரண்டு பேருக்காகச் சாப்பிட வேண்டும் என்ற பொதுவான கருத்து, பெரும்பாலும் கர்ப்பிணிப் பெண்களாலும் அவர்களது குடும்பங்களாலும் அதிகளவு முக்கியத்துவம் வாய்ந்ததாக எடுத்துக்கொள்ளப்படுகிறது! இது கர்ப்பக்காலத்தில் அளவுக்கதிகமான எடை அதிகரிப்பு ஏற்படக் காரணமாக அமைகிறது. இதன் காரணமாக, குழந்தை பிறந்த பின் மீண்டும் சாதாரண எடை மற்றும் வடிவத்திற்குத் திரும்புதல் மிகவும் கடினமான ஒன்றாகி விடுகிறது, மேலும் இது பல சமயங்களில் பெண்ணின் சுயமரியாதையையும் பாதிக்கிறது!

இந்தியப் பெண்களுக்காகப் பரிந்துரைக்கப்படும் எடை அதிகரிப்பு வரம்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. உங்கள் உண்மையான எடை அதிகரிப்பை ஒப்பிட, இதை ஒரு ஒப்பீட்டு அளவாகப் பயன்படுத்துங்கள்.

இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம், கர்ப்பகாலத்தின்போது 10 முதல் 12 கிலோ எடை அதிகரிப்பு உகந்தது என்றும், 16 கிலோ வரை அதிகரிப்பதில் தவறொன்றுமில்லை என்றும் பரிந்துரைக்கிறது

கருவுறும் முன் ஆரோக்கியமான எடை வரம்பில் இருந்த பெண்களுக்குப் பரிந்துரைக்கப்படும்ஒவ்வொரு மூன்று மாதத்திற்கான எடை அதிகரிப்பு இலக்கு வரம்புகள் (BMI:  18-22.9)

  முதல் மூன்று மாதங்களில் இருக்கக்கூடிய எடை அதிகரிப்பு இரண்டாம் மூன்று மாதங்களில் இருக்கக்கூடிய எடை அதிகரிப்பு மூன்றாம் மூன்று மாதங்களில் இருக்கக்கூடிய எடை அதிகரிப்பு
  (12 வாரங்கள் முடிவில்) (13 முதல் 28 வாரங்கள்) (29வது வாரம் முதல்)
மொத்த எடை அதிகரிப்பு: 10 கிலோ 0 4.5 5
மொத்த எடை அதிகரிப்பு 16 கிலோ 2 7.5 7

நீங்கள் அதிக எடை உடையவரா அல்லது குறைந்த எடை உடையவரா அல்லது கர்ப்பத்தில் இரட்டைப்பிள்ளைகளைச் சுமக்கிறவரா என்பதைப் பொறுத்து, மொத்த எடை அதிகரிப்புக்கான உங்கள் இலக்குகளும் வித்தியாசமானவையாக அமையும்

  குறைந்தபட்ச எடை அதிகரிப்பு    அதிகபட்ச எடை அதிகரிப்பு
BMI வரம்பு   கர்ப்பத்தில் ஒரு குழந்தை இரட்டைப்பிள்ளைகள்
சாதாரண எடை 10 16 17
அதிக எடை 7 11 14
உடல் பருமன் 5  9  11
குறைந்த எடை 12.7 18 மருத்துவரின் ஆலோசனையைப் பெறவும்

தாயின் எடையில் ஏற்படும் அதிகரிப்பு, கருவில் உள்ள குழந்தையின் ஊட்டச்சத்தின் அளவு மற்றும் வளர்ச்சியைக் கணிக்க உதவுகிறது. ஆனால், குழந்தையின் வளர்ச்சியைக் கணிப்பதற்கு மிகச் சரியான வழி, கர்ப்பக்கால அல்ட்ராசவுண்ட் சோதனை ஆகும். எனவே, உங்கள் மருத்துவரின் ஆலோசனையின் பேரில், நீங்கள் அல்ட்ராசவுண்ட் சோதனையைச் செய்துகொள்ள வேண்டும்.

கர்ப்பக்காலத்தின் போது எடுத்துக்கொள்ளப்படும் உணவு போதுமான அளவு எடை அதிகரிப்பை ஏற்படுத்த வேண்டுமேயொழிய, அளவுக்கதிகமான எடை அதிகரிப்பை ஏற்படுத்திவிடக்கூடாது. மேலும் அது போதுமான ஊட்டச்சத்தை வழங்க வேண்டும். கர்ப்பக்காலத்தில் மிக அதிக அளவில் தேவைப்படுகிற ஆறு ஊட்டச்சத்துக்கள் உங்களுக்கு அவசியம் கிடைக்க வேண்டும். அவையாவன: இரும்புச்சத்து, ஃபோலிக் அமிலம், கால்சியம், அயோடின், புரதச்சத்து மற்றும் வைட்டமின் ஏ. இதன் பொருள் என்னவெனில், தினமும் உண்ணும் உணவில் வெறுமனே கலோரிகளைச் சேர்த்துக்கொள்ளாமல் உணவின் தரத்தை மேம்படுத்துவதாகும். அத்தகைய ஒரு உணவுத் திட்டத்தை நாங்கள் உங்களுக்காக வடிவமைத்துள்ளோம், அதை இப்போதே பெறவும்!

கர்ப்பக்காலத்திற்கான உங்கள் உணவுத்திட்ட அட்டவணையை இப்போதே பெறவும்!

பார்க்கவும்: கர்ப்பக்காலப் பராமரிப்பிற்கான எங்கள் மூல ஆவணங்கள்