இப்போது உங்கள் உணவுப் பட்டியலைப் பெறவும்!

உணவுக் கட்டுப்பாட்டு மேலாண்மை என்பது நீரிழிவு நோயாளிகளுக்கு இரத்தச் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த மட்டுமல்லாமல், உடல் எடை மற்றும் இதய அபாயக் காரணிகள் போன்ற பிற ஆபத்துகளைக் கட்டுப்படுத்தவும் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக அறியப்படுகிறது

உலகிலுள்ள அனைத்து நீரிழிவு நிபுணத்துவ முகவர் நிறுவனங்களும் ( ADA, AACE, IDF மற்றும் எங்கள் சொந்த ICMR) நீரிழிவு நோய்க்கான உணவுக் கட்டுப்பாடு குறித்த வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளன. இதில் HWI பணியாளர்களான நாங்கள் 2ஆம் வகை நீரிழிவு நோய்க்கான உணவுத் திட்டத்தை முறைப்படுத்துவதற்காக, பகுப்பாய்வை மேற்கொண்டோம்.  அதாவதுநீரிழிவுக்கு முந்தைய நிலை மற்றும் வளர்சிதைமாற்ற நோய்த்தாக்கம்  இரண்டாலும் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்குத் தேவையான உணவு மாற்றங்கள் ஒன்றுதான்

நீரிழிவுக்கான உணவுத் திட்டத்தை எப்படி உருவாக்குவது

‘2ஆம் வகை நீரிழிவுக்கான உணவுத் திட்டத்தைஉருவாக்கும் போது பின்பற்ற வேண்டிய மூன்று மிக முக்கிய விஷயங்களாவன:

  1. இரத்தச் சர்க்கரையைக் கட்டுப்படுத்த, உணவு/பானம் மூலம் எடுத்துக்கொள்கின்ற கார்போஹைட்ரேட் அளவை நிர்வகித்தல்
  2. எடையைக் குறைக்க அல்லது ஆரோக்கியமான எடையைப் பராமரிக்க, உணவு/பானம் மூலம் எடுத்துக்கொள்கின்ற ஒட்டுமொத்த கலோரி அளவை நிர்வகித்தல்
  3. CVD (இதய நோய்) அபாயத்தைக் குறைக்க, உணவு/பானம் மூலம் எடுத்துக்கொள்கின்ற கெட்டக் கொழுப்பு மற்றும் உப்பின் அளவைக் கவனத்தில் கொள்ளுதல்

உணவு/பானம் மூலம் எடுத்துக்கொள்கின்ற கார்போஹைட்ரேட் அளவைச் சரியாக நிர்வகிக்கவும்

நீரிழிவு நோயாளிகளுக்கு, உடலில் தேவையானதைவிட குறைவான இன்சுலின் சுரப்பது அல்லது சுரக்கப்படும் இன்சுலினை செல்கள் சரியான முறையில் பயன்படுத்தாமல் இருப்பது போன்ற சிக்கல்கள் இருக்கக்கூடும். இரத்தத்தில் குளுக்கோஸ் அளவைச் சீராக வைத்திருப்பதுதான் இன்சுலினின் மிக முக்கிய வேலையாகும். ஆனால், நீரிழிவு நோயாளிகளுக்கு இன்சுலின் அதன் வேலையைச் சரியாக செய்யாது என்பதால் அவர்களது இரத்தத்தில் குளுக்கோஸ் அளவு வழக்கமான அளவைக்காட்டிலும் அதிகமாவே இருக்கும்

எனவே, நீரிழிவு நோயால் ஏற்படும் சிக்கல்களைத் தடுக்க அல்லது கட்டுப்படுத்த, இரத்தச் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டியது மிகவும் அவசியமாகும்

இயல்பாகவே அதிகளவு கார்போஹைட்ரேட் உணவு வகைகளை உட்கொள்ளும் இந்தியர்களுக்கு, இந்தக் கருத்து மிகவும் பொருத்தமானது. குளிர்பானங்கள், இனிப்பு மற்றும் பதப்படுத்தப்பட்ட கார்போஹைட்ரேட்டுகளை உட்கொள்வது அதிகரித்து வருவது, நீரிழிவு நோயின் நிலைமையை மேலும் மோசமாக்குகிறது!

இதற்கு என்ன செய்ய வேண்டும்? சர்க்கரை, பதப்படுத்தப்பட்ட கார்போஹைட்ரேட்டுகள் போன்றவற்றை விட்டுவிட வேண்டுமா?

இல்லை. நீங்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருந்தால், சர்க்கரை, அரிசி, உருளைக்கிழங்கு அல்லது இனிப்புகளை முற்றிலுமாக விட்டு விடவேண்டும் என்பது தவறான கருத்து. மாறாக அவற்றை முற்றிலுமாக விட்டுவிடக் கூடாது!

ஆனால், கார்போஹைட்ரேட் உணவை நீங்கள் நன்கு அறிந்திருக்க வேண்டும், சர்க்கரை அளவு அதிகரிப்பதைத் தவிர்ப்பதற்காக நீங்கள் கார்போஹைட்ரேட் உட்கொள்ளும் அளவை எப்போதும் கவனத்தில் கொள்ள வேண்டும். இதன் மூலம் தான் கார்போஹைட்ரேட்டைக் கணக்கிடுவது அறிமுகமானது; முழு தானியங்களிலிருந்தோ அல்லது சுக்ரோஸிலிருந்தோ கிடைக்கக்கூடிய அதே அளவு கார்போஹைட்ரேட், உணவு உட்கொண்ட பின்பு உள்ள இரத்தச் சர்க்கரை அளவை கிட்டத்தட்ட அதே அளவிற்கு உயர்த்தும். உணவு/பானம் மூலம் எடுத்துக்கொள்கின்ற கார்போஹைட்ரேட் அளவை நீங்கள் கண்காணிக்க வேண்டும்.

நீங்கள் சாதாரணமான சர்க்கரை அல்லது இனிப்பு வகைகளை எப்போதாவது உட்கொள்ள விரும்பினால், அவற்றுக்குப் பதிலாக ஆரோக்கியமான கார்போஹைட்ரேட்டுகளை எடுத்துக்கொண்டு, அவற்றைத் தவிர்ப்பதை உறுதிசெய்து கொள்ளுங்கள்

எடையைக் குறைக்க அல்லது ஆரோக்கியமான எடையைப் பராமரிக்க, உணவு/பானம் மூலம் எடுத்துக்கொள்கின்ற ஒட்டுமொத்த கலோரி அளவைக் கட்டுப்படுத்துதல்

அதிக உடல் எடையைக் குறைப்பது இரத்தச் சர்க்கரை அளவை கட்டுப்படுத்துவதற்கு மட்டுமல்லாமல் இதய நோய்கள் மற்றும் பிற நோய்களின் ஆபத்தையும் கட்டுப்படுத்த உதவுகிறது

உங்கள் உடல் எடையை 3-5% சதவிகிதம் குறைத்தால், உங்கள் உடலிலுள்ள இரத்தச் சர்க்கரை அளவு சீரடையும். ஆனால், 10 சதவிகிதம் வரை குறைத்தால், இரத்தத்தில் கொழுப்புத் தன்மை சீரடைந்து இதய நோய் அபாயமும் குறையும்

மேலும் அறிய, பின்வரும் தளத்திற்குச் செல்லவும்: நீரிழிவுக்கான எடை குறைப்பு 

கெட்டகொழுப்புகள் மற்றும் உப்பு ஆகியவற்றை உட்கொள்வதைக் கண்காணித்தல்

CVD (மாரடைப்பு, பக்கவாதம், கால் அழுகல் நோய் ஆகியவை உட்பட) மூலம் ஏற்படும் சிக்கல்கள்தான் நீரிழிவு நோய் மரணங்களுக்கு முக்கியக் காரணமாகும்

ஆகவே, நீரிழிவு நோயாளியின் CVDக்கான ஆபத்துக் காரணிகளை நிர்வகிக்க, உணவில் மாற்றங்கள் செய்வது மிகவும் முக்கியமானதாகும்உணவு/பானம் மூலம் எடுத்துக்கொள்கின்ற உப்பு மற்றும் கெட்டகொழுப்புகளின் அளவைக் கட்டுப்படுத்துவதும், இந்த மாற்றங்களில் அடங்கும். நீரிழிவு நோயாளிகள் சாதாரண மக்களைவிட குறைந்த அளவு கெட்ட கொழுப்புகளையும் உப்பையும் உட்கொள்ள வேண்டும்

ஆனால், எண்ணெய் சேர்க்காத சமையல் அல்லது தீவிர எண்ணெய் கட்டுப்பாட்டை மேற்கொள்வது அவசியமா? இல்லை! இந்தியாவில், மருத்துவர்கள் மற்றும் உணவு நிபுணர்கள் பெரும்பாலும் குறைந்த அளவு கொழுப்புஉள்ள உணவை உட்கொள்ளுமாறு நீரிழிவு நோயாளிகளுக்குப் பரிந்துரைக்கின்றனர். இதை அளவுக்கு அதிகமாக உட்கொண்டால் உண்மையில் அது தீங்கு விளைவிக்கும். ஆனால், சராசரியாக இந்தியர்கள் அதிக கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் குறைவான புரதங்கள் மற்றும் கொழுப்புகள் கொண்ட உணவையே அதிகம் உட்கொள்கின்றனர்! (மேலும் அறிய, இதைப் படிக்கவும்இந்திய உணவு: நன்மை தீமைகள்)

அதற்கு பதிலாகச் செய்ய வேண்டியது என்னவென்றால், அதிக அளவு கொழுப்பு உள்ள வனஸ்பதி (நொறுக்குத்தீனி மற்றும் உணவகம்/ ஃபாஸ்ட் ஃபுட் உணவுகள் போன்றவற்றில் உள்ளன), கொழுப்பு நீக்கப்படாத பால், வெண்ணெய், நெய் மற்றும் கொழுப்பு நிறைந்த இறைச்சி போன்ற  கெட்டகொழுப்புகளுக்குப் பதிலாக, சிறந்த தாவர எண்ணெய்களைப் (ஆலிவ், கனோலா, ரைஸ் பிரான் போன்றவை. தேங்காய் எண்ணெய் மற்றும் பாமாயில் தவிர) பயன்படுத்தவும்

இந்த ஆபத்துக் காரணிகளை நிர்வகிப்பது பற்றி மேலும் தெரிந்து கொள்ள, பின்வரும் தளத்திற்குச் செல்லவும்: நீரிழிவில் உள்ள இதய ஆபத்துக் காரணிகளுக்கான உணவு மேலாண்மை

உங்கள் சொந்த நீரிழிவு உணவுத் திட்டத்தை உருவாக்க HWI ஒரு நீரிழிவு உணவு விளக்கப்பட கால்குலேட்டரை வடிவமைத்துள்ளது. இதில் எடை குறைப்புக்கான உணவுக் கட்டுப்பாடுவிருப்பத்தையும் தேர்ந்தெடுக்கவும்!

இப்போது உங்கள் உணவுப் பட்டியலைப் பெறவும்!

பார்க்கவும்நீரிழிவு நோய்க்கான எங்களது மூல ஆவணங்கள்