உங்களுக்கு மாரடைப்பு ஏற்படுவதற்கான அபாய அளவை இப்பொழுதே கணக்கிடுங்கள்!

உங்களுக்கு மாரடைப்பு ஏற்படுவதற்கான அபாய அளவைக் கணக்கிடுவதால் ஏற்படும் நன்மை

மக்களின் இதய நோயை நிர்வகிப்பதற்கான இரண்டு அடிப்படை விஷயங்கள்

  1. ஆரம்பநிலையிலேயே அதைக் கண்டறிந்து, மருந்துகள் மற்றும் அறுவை சிகிச்சை வாயிலாக அதை நிர்வகித்தல்
  2. மக்களுக்கு நோய்/நோயின் அறிகுறிகள் தோன்றுவதற்கு முன்பே, அபாயக் காரணிகளைக் கண்டறிந்து அவை அனைத்தையும் சிகிச்சை மூலம் கட்டுப்படுத்துதல்

CVD நிர்வாகம் மற்றும் தடுப்பியல் வல்லுநர்கள், இத்தகைய நோய்களைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்கான சிறந்த வழி, அவற்றின் அபாயக் காரணிகளைக் கண்டறிவதுதானேயொழிய ECG போன்ற பரிசோதனைகள் வாயிலாக நோயைக் கண்டுபிடிப்பது அல்ல என்பதைப் புரிந்துகொள்ள ஆரம்பித்திருப்பது அதிகரித்திருக்கிறது; இரண்டாவது அணுகுமுறையே சிறந்தது

CVD க்கான அறிகுறிகள் இல்லாதவர்களுக்கு IHD நோயைக் கண்டுபிடிப்பதற்காக, அடிப்படைப் பரிசோதனைகளான ECG மற்றும் ஸ்ட்ரெஸ் பரிசோதனையை மேற்கொள்ள அறிவுறுத்தக்கூடாது என்று AHA அழுத்தம் திருத்தமாகப் பரிந்துரைக்கிறது ஏனென்றால், அது எவ்வித நன்மையான விளைவுகளையும் ஏற்படுத்துவதில்லை. மாறாக தேவையற்ற பரிசோதனைகள் போன்ற குழப்பங்களுக்கு வழிவகுக்கிறது

இதற்குப் பதிலாக, அடுத்த பத்து வருடங்களுக்கு மாரடைப்பு அல்லது CVD ஏற்படுவதற்கான அபாயத்தைக் கணக்கிட்டுக் கூறும் ஒரு குறிப்பிட்ட கூட்ட மக்களுக்கான சிறப்பு யூக மதிப்பெண்ணுடன் ஒத்துப்போகும் அபாயக் காரணிகளை நிர்வகித்தல் முக்கியத்துவம் பெற்று வருகிறது

நீங்கள் ஃபிராமிங்காம் இதய அபாய மதிப்பெண்ணைப் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். இதுவே இந்த வகையில் அதிகம் அறியப்பட்ட மதிப்பெண் ஆகும். ஆனால், இது அமெரிக்க மக்களுக்கு மட்டுமே பொருத்தமானதாகும்இந்தியர்களைப் பொறுத்தவரை, இத்தகைய அபாய மதிப்பெண் WHO/ISH அபாய மதிப்பெண் மட்டுமே, இது இந்திய மருத்துவர்களால் மிகப்பொருத்தமானது என்று பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. HWI இல் நாங்கள் உங்களுடைய அடுத்த பத்து வருடங்களுக்கான மாரடைப்பு அபாயத்தைக் கணக்கிட இந்த மதிப்பெண்ணைப் பயன்படுத்துகிறோம்

கணக்கிடப்பட்ட இந்த அபாய மதிப்பெண், உங்களுக்கு கொலஸ்டிராலைக் குறைப்பதற்கான மருந்துகளைக் கொடுக்க வேண்டுமா, எவ்வளவு கால இடைவெளியில் உங்களுக்கு மருத்துவப் பரிசோதனைகள் செய்ய வேண்டும் போன்றவற்றைத் தீர்மானிக்க உங்கள் மருத்துவருக்கு உதவும்

HWI மாரடைப்பு அபாய கால்குலேட்டர் என்ன சொல்லுகிறது?

அபாயக் கணக்கீட்டு மதிப்பெண், தனிப்பட்ட விதத்தில் அல்லாமல் ஒரு குழுவில் ஒருவருக்கு மாரடைப்பு அல்லது பக்கவாதம் ஏற்படுவதற்கான வாய்ப்பை வரையறுக்கிறது; உதாரணமாக அடுத்த பத்து வருடங்களில் உங்களுக்கு மாரடைப்பு ஏற்படுவதற்கான உங்கள் அபாயக் கணக்கீட்டு மதிப்பெண் 10-20% என்றால், உங்களையொத்த ஒரு கூட்ட மக்களில், 10-20% மக்களுக்கு அடுத்த பத்து வருடங்களில் மாரடைப்பு நேரிடும் என்பது பொருள். எனவே, பீதியடையாமல் உங்கள் அபாயக் காரணிகளை மாற்றுவதை நோக்கி நேர்மறையாக அடியெடுத்து வைப்பது அவசியமாகும்

HWI கால்குலேட்டர் ஆனது புகைப்பிடித்தலைக் கைவிடுதல் அல்லது கொலஸ்ட்ரால் அளவைக் குறைத்தல் போன்ற செயல்கள் மூலம் அபாயத்தைக் கட்டுப்படுத்துவதால் உங்களுக்கு மாரடைப்பு ஏற்படுவதற்கான மொத்த அபாயத்தில் எவ்வாறு மாற்றத்தை ஏற்படுத்துகிறது என்பதையும் காட்டுகிறது, இது உங்களுக்கு உற்சாகத்தைத் தரும்

மாரடைப்பு அபாயத்தைக் கணக்கிட என்னென்ன பரிசோதனை முடிவுகள் தேவை

கீழ்கண்ட பரிசோதனை முடிவுகள் உங்களிடம் இருக்க வேண்டும் (சமீபத்தில் செய்த பரிசோதனைகளின் முடிவுகள் இருப்பது மிக நல்லது. ஆனால், உங்கள் வாழ்க்கை முறையும் உடல் நலனும் அதிகம் மாறாத பட்சத்தில் ஒரு வருடத்திற்கு முன் செய்த பரிசோதனைகளின் முடிவுகளும்கூட ஏற்றுக்கொள்ளப்படத் தக்கவையே)

  • BMI
  • இடுப்புச் சுற்றளவு
  • உணவருந்தும் முன் செய்யப்பட்ட இரத்தச் சர்க்கரைப் பரிசோதனையின் முடிவு (FBS)
  • இரத்த லிப்பிடுகள்: மொத்த கொலஸ்ட்ரால், LDL மற்றும் HDL கொலஸ்ட்ரால் மற்றும் டிரைகிளிசரைடுகள்(TG)
  • இரத்த அழுத்தம்

இந்தப் பரிசோதனை முடிவுகள் தயாராக உள்ளனவா?

உங்கள் அபாய மதிப்பெண்ணை இப்பொழுதே கணக்கிடுங்கள்!

பார்க்கவும்: இதய அபாய நிர்வாகப் பரிந்துரைக்கான எங்கள் மூல ஆவணங்கள்