நீரிழிவுக்கான சிகிச்சையானது, இரத்த சர்க்கரை அளவை இயல்பான வரம்பிற்குள் வைப்பதில் கவனம் செலுத்துகிறது, ஏனென்றால், உடல் மெட்டபாலிசத்தில், நீரிழிவு நோய் சீர்குலைக்கும் மிகவும் முக்கியமான அம்சம் அதுதான். ஆனால், நீரிழிவுக்கான சிகிச்சையில் இன்னும் பல விஷயங்கள் உள்ளன, தொடர்ந்துப் படித்திடுங்கள்.

இது சீர்குலைந்த மெட்டபாலிசம் ஏற்படும் ஒரு நோய், இந்த நிலை CVD (இதய நாள நோய்கள் – CardioVascular Diseases) ஏற்படுவதற்கான அபாயத்தை கணிசமாக அதிகரிக்கின்றது. இதன் விளைவாக மாரடைப்பு, வாதம் போன்ற சிக்கல்கள் ஏற்படலாம். நீரிழிவு நோய் இருப்பவர்களுக்கு, வளர்சிதை மாற்ற (மெட்டபாலிக்) நோய்க்குறிகளான, வழக்கத்தை விட அதிக ரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் மற்றும் அதிக உடல் எடை போன்றவையும் பொதுவாகக் காணப்படுகின்றன.

எனவே நீரிழிவு நோயை நல்ல முறையில் நிர்வகிப்பதற்கு, இரத்த சர்க்கரையைக் கட்டுப்படுத்துவது மீது மட்டுமின்றி, பொதுவாக சேர்ந்து காணப்படும் மற்ற உடல்நலக் கோளாறுகளையும் சரியான நேரத்தில் கண்டறிந்து, நிர்வகிப்பதும் அவசியமாகிறது.

நீரிழிவு நோய் சிகிச்சையின் ABC

நீரிழிவு நோயின் சிகிச்சையில் கட்டுப்படுத்த வேண்டிய மிகவும் முக்கியமான இலக்குகள், ‘நீரிழிவு நோயின் ABC’ என்று சுருக்கமாகத் தரப்பட்டுள்ளன:

A:  இரத்த சர்க்கரை கட்டுப்பாட்டைச் சுட்டிக் காட்டும் HbA1c அளவுகள்

B:  இரத்த அழுத்தம்

C:  இரத்த கொலஸ்ட்ரால் அளவுகள்

ஆனாலும், நீரிழிவு நோய் கண்டறிதல் மற்றும் கண்காணிப்பு, வாக்ஸின் அளித்தல் போன்ற காரணிகள் ஆகியவற்றை கருத்தில் கொள்ளாததால், இந்தப் பட்டியலும் முழுமையற்றதே.

பின்வரும் அட்டவணை, நீரிழிவு நோயின் மீது ஒட்டுமொத்த நல்ல கட்டுப்பாட்டைப் பெறுவதற்கான எல்லா அளவுருக்களையும் சுருக்கமாகத் தருகிறது

நீரிழிவு நோய் இருக்கும் நபருக்கு உள்ள அபாயக் காரணிகளுக்கான பரிசோதனைகள் மற்றும் இலக்குகள்
 சோதனை சுட்டிக்காட்டும் அளவு

உகந்த நிலை கட்டுப்பாடு

சுட்டிக்காட்டும் அளவு

நல்ல கட்டுப்பாடு

எப்போது/எப்படி இந்தச் சோதனையை செய்து கொள்ள வேண்டும்
HbA1c ஆய்வகச் சோதனை <6.5% பெரும்பாலான நபர்களுக்கு, நோயின் ஆரம்ப ஆண்டுகளிலும் இளவயதிலும் நோய் இருப்பதாகப் பகுப்பாய்வு செய்யப்பட்டவர்களுக்குக் குறிப்பாக <7%,

 • நீண்டகாலமாக நோய் இருப்பவர்களுக்கு
 • மற்ற உடல்நலக் கோளாறுகள் இருப்பவர்களுக்கு
 • மிக அதிகமான கட்டுப்பாட்டை இலக்காக்கி, அடிக்கடி ஹைப்போகிளைசீமியா ஏற்படும் நபர்களுக்கு
1. நோய் பகுப்பாய்வில்

2. பின் தொடர்தலில்:

 • இலக்கு எட்டப்பட்டுவிட்டால்: ஆறு மாதங்களுக்கு ஒருமுறை
 • இல்லையென்றால்: மூன்று மாதங்களுக்கு ஒருமுறை
இரத்த சர்க்கரை பட்டினிநிலை/உணவுக்கு முந்தையநிலை <110 mg/dL

உணவுக்குப் பின்/PP <140 உணவுக்கு இரண்டு மணிநேரம் கழித்து மற்றும் <180 உணவு உண்ணத் தொடங்கியதில் இருந்து 1-2 மணிநேரம் பிறகு

பட்டினிநிலை/உணவுக்கு முந்தையநிலை : 80-130

PP: இரண்டு மணிநேரங்களில் < 160

பகுப்பாய்வு:

பட்டினிநிலை மற்றும் PP இரத்த அளவுகளை ஆய்வகத்தில் சோதித்தல்

பின் தொடர்தலுக்கு:

SMBG கண்காணிப்பை அடிக்கடி செய்து கொள்ள வேண்டும்,

SMBG

ஐக் கிளிக் செய்து, விவரங்களை அறியலாம்

ஆய்வகப் பரிசோதனைகளில், இலக்கு அளவை விடவும் HbA1c அதிகமாகி விட்டால், உங்கள் மருத்துவர் சிகிச்சையை சரிசெய்வதற்குப் பரிந்துரைக்கலாம்.

இரத்த அழுத்தம் < 130/85 < 140/90
 • இலக்கு அளவு எட்டப்பட்டால்: குறைந்தது ஆறு மாதங்களுக்கு ஒருமுறை,
 • இல்லையென்றால்: மருத்துவரின் ஆலோசனைப்படி இன்னும் அடிக்கடி
இரத்த லிப்பிட் அளவுகள்
  நல்லக் கட்டுப்பாட்டுக்கான இலக்கு கண்காணிப்பின் கால இடைவெளி
LDL கொலஸ்ட்ரால் LDL இலக்குகள் என்பவை உங்களுடைய ‘இதய நோய் அபாய அளவைப் பொருத்தது’

அபாயம் அதிகமாக இருந்தால், LDL கொலஸ்ட்ராலுக்கான இலக்கு <70 mg/dL

அபாயம் குறைவாக அல்லது மிதமாக இருந்தாலும், LDL இலக்குகள் <100 mg/dL என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்

ஸ்டாட்டின்கள் மூலமான மருந்து சிகிச்சையை கருத்தில் கொள்ள வேண்டும், உங்களுடைய வயது 40 க்கு மேலாகி விட்டால், உங்கள் மருத்துவரிடம் கலந்தாலோசிக்கவும்.

 • இலக்கு அளவு எட்டப்பட்டால்: ஆறு மாதங்களுக்கு அல்லது ஆண்டுக்கு ஒருமுறை
 • இல்லையென்றால்: மூன்று மாதங்களுக்கு ஒருமுறை
HDL கொலஸ்ட்ரால் பெண்களுக்கு > 50 மற்றும் ஆண்களுக்கு >40, இதில் டயட்டும் வாழ்க்கைமுறையும் அதிக தாக்கத்தைக் கொண்டிருக்கிறது
டிரைகிளிசரைடுகள் <150 mg/dL, டயட்டும் வாழ்க்கைமுறையும் இதில் அதிக தாக்கத்தைக் கொண்டிருக்கும்
எடை நீங்கள் அதிக எடையில் இருந்தால், உடல் எடையின் 5-10% எடையைக் குறைத்து விடவும் வழக்கமான எடை வரம்பில் இருந்தீர்கள் என்றால், மாதம் ஒருமுறை சோதிக்கவும்

நீங்கள் எடை அதிகமானவராக/பருமனானவராக இருந்தால் மற்றும் எடையைக் குறைக்க முயற்சி வருகிறீர்கள் என்றால், வாரம் ஒருமுறை அல்லது சிறப்பான வகையில் தினமும் ஒருமுறை

புகைப்பிடித்தல் உடனடியாக புகைப்பிடித்தலை விட்டுவிடவும் கூடியவிரைவில் செய்வது நல்லது!
மைக்ரோவாஸ்குலார் சிக்கல்களுக்காகப் பரிசோதனைகள்
 1. டயாபட்டிக் நெஃப்ரோபதிக்கான (சிறுநீரக நோய்) பரிசோதனைகள்

eGFR உடன் சீரம் கிரியேட்டினைன்

மைக்ரோஅல்புமினியா/ சிறுநீர் அல்புமின் கிரியேட்டினின் விகிதம் ஆகியவற்றுக்கான சோதனை

 •  eGFR: >90 மிலி/நிமி/1.73m^2 உடல் மேற்பரப்பு பரப்பு
 • மைக்ரோஅல்புமினியா(UACR): <30 மிகி/கிராம்
 • பகுப்பாய்வில் மற்றும் அதன் பிறகு ஒரு ஆண்டுக்குப் பிறகு, அளவுகளில் மாறுபாடுகள் வரும் வரை
 • அதன் பிறகு, உங்கள் மருத்துவர் அறிவுறுத்தியபடி
 1. நீரிழிவு சார்ந்த ரெட்டினோபதிக்காக கண் பரிசோதனை
கண்களை விரிவுப்படுத்துதல் மற்றும் கண் நிபுணரால் ரெட்டினாவைப் பரிசோதித்தல் உட்பட விரிவான கண் பரிசோதனை
 • பகுப்பாய்வின்போது பரிசோதனை, ரெட்டினோபதி இல்லையென்றால், அதன் பிறகு இரண்டு ஆண்டுகள் கழித்து
 • ரெட்டினோபதி இருந்தால் : வருடத்திற்கு ஒருமுறை அல்லது மருத்துவர் அறிவுறுத்தினால் இன்னும் அடிக்கடி
 1. டயபட்டிக் நியூரோபதிக்கான பரிசோதனை: குறிப்பாக நீரிழிவு பாதிப்புடைய பாதங்கள்
 1. கைகால்களில் நியூரோபதி: முழுமையான பாதப் பரிசோதனை
நியூரோபதிக்கான பரிசோதனையை மருத்துவர் மூலம் செய்து கொள்ளவும், அவற்றில் பின்வருவன இருக்க வேண்டும்:

 • பாதத்தின் அமைப்பு மற்றும் சீர்குலைவு
 • சருமத்தின் ஒருங்கிணைவு (காயங்கள்/புண்கள், தடித்து காணப்படுதல் இன்மை)
 • வெப்பநிலை/சூடு
 • பாதத்தின் துடிப்பு
 • பகுப்பாய்விலும் அதன் பிறகு வருடந்தோறும் எல்லா சோதனைகளும் இயல்பாகும் வரை
 • இல்லையென்றால் இன்னும் அடிக்கடி (மருத்துவர் அறிவுறுத்தினால்)
 1. கார்டியாக் அட்டோனாமிக் நியூரோபதி
 • இதயத் துடிப்பு மாறும்தன்மை
 • படுத்திருப்பதில் இருந்து எழுந்து நிற்பதற்கு இடையே உள்ள இரத்த அழுத்த மாற்றம்
 • பகுப்பாய்விலும் அதன் பிறகு வருடந்தோறும் எல்லா சோதனைகளும் இயல்பாகும் வரை
 • இல்லையென்றால் இன்னும் அடிக்கடி (மருத்துவர் அறிவுறுத்தினால்)
 1. பிற நியூரோபதிகள்
 • ஆணுறுப்பு விரைப்பில் குறைபாடு
 • வயிற்றுப்போக்கு/மலச்சிக்கல்
 • தொடர்ந்து வயிறு நிரம்பியிருப்பதாக உணர்வது (காஸ்ட்ரோபராசிஸ்)
 • பெண்ணுறுப்பு வறண்டுபோதல்
 • சிறுநீர் குறைபாடுகள் (சிறுநீர் தங்கிவிடுதல், அடிக்கடி வருதல், இரவு நேரத்தில் சிறுநீர் வருதல், சிறுநீரைக் கட்டுப்படுத்த முடியாமை)
உங்களுக்கு இதில் ஏதாவது ஏற்பட்டால், மருத்துவரிடம் ஆலோசிக்கவும்.
CVD (இதய நாள் நோய்கள்)

க்கான சோதனை

உங்களுக்கு 40 வயதுக்கு மேலானால் பேஸ்லைனாக ஒரு ECG செய்யப்பட வேண்டும்

அதன் பிறகு, மருத்துவரின் ஆலோசனைப்படி செய்ய வேண்டும்

 

பின்வரும் சிக்கல்கள் உங்களுக்கு இருந்தால்:

 1. குறிப்பிட்ட தூரம் நடக்கும்போது கால்கள் அல்லது பாதங்களில் வலி ஏற்படுதல், ஓய்வெடுக்கும்போது சரியாகுதல்
 2. காரணம் எதுவும் தீர்மானிக்க முடியாதபடி அடிவயிற்றில் கடுமையான வலி
 3. தானாகவே சரியாகி விடக் கூடிய, திடீர் பார்வை இழப்பது, வாய் கோணிக்கொள்ளுதல், கால் கைகளில் சக்தி இழப்பு அல்லது நடத்தையில் மாற்றம்

அல்லது

டயபட்டிக் நெஃப்ரோபதி அல்லது நியூரோபதி இருப்பதாகக் கண்டறியப்படுதல்

ECG செய்யப்பட வேண்டும், மேலும் சோதனைகள் தேவைப்படலாம், உங்கல் மருத்துவரிடம் கலந்தாலோசிக்கவும்
உங்களுக்கு இந்த அறிகுறிகள் இருந்தால் இதயநோய்க்கான அபாயக்காரணி மதிப்பீட்டை’ செய்துக்கொள்ளவும், மேலும் அதன் முடிவுகளின் அடிப்படையில் மேலும் ஆலோசனையைப் பெறுவீர்கள்
வாக்ஸினேஷன்கள் நீரிழிவு நோயானது, குறைவுற்ற நோயெதிர்ப்பு திறனையும், நோய் தொற்றுகளுக்கான அதிகரித்த அபாயத்தையும் உருவாக்குகிறது. பின்வருவதில் ஏதேனும் வாக்ஸின்களை நீங்கள் எடுத்துக் கொள்ள வேண்டுமா என்று உங்கள் மருத்துவரிடம் கலந்து பேசுங்கள்

 1. நிமோக்கோகல் வாக்ஸின்: PPSV 23, அல்லது உங்களுக்கு 65 வயதுக்கு மேலானால் PCV23 மற்றும் PPSV
 2. Td வாக்ஸின்: நீரிழிவு நோய் இருக்கும் எல்லா பெரியவர்களும் Td பூஸ்டரை 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை எடுத்துக் கொள்ள வேண்டும்
 3. ஹெபடைடிஸ் B வாக்ஸின்:  நீரிழிவு நோய் உடைய 20-59 வயதில் உள்ளவர்களுக்கு, முன்பே எடுத்துக் கொள்ளாவிட்டால்
 4. இன்ஃப்ளூயன்ஸா: வருடத்திற்கொருமுறை
உளவியல் மதிப்பீடு
 • நீரிழிவு நோய் இருப்பவர்களில் 20–25% பேருக்கு மன அழுத்தம் ஏற்படுகிறது, மேலும் இதனால் மாரடைப்பு மற்றும் மரணம் கூட ஏற்படுவதற்கான அபாயம் அதிகரிக்கிறது
 • நீரிழிவு தொடர்பான மனச்சிதைவு/கவலை 18–45% நோயாளிகளைப் பாதிக்கிறது, இதனால் சர்க்கரை அளவுகளை நல்லபடியாகக் கட்டுப்படுத்த முடியாமல் போகிறது
 • நீரிழிவு நோயாளிகளிடையே முறையற்ற சாப்பிடும் பழக்கமும் பொதுவாக காணப்படுகிறது
இவற்றுக்காக ஒரு கண்டறிதல் சோதனையை fஎடுத்துக் கொள்ளவும், மேலும் உங்களுக்கு கவலை ஏற்பட்டால், உங்கள் மருத்துவரிடம் கலந்தாலோசிக்கவும்
குழந்தைப் பெற்றுக்கொள்ளும் திறனுடைய பெண்களுக்கு
 • கட்டுப்படுத்தப்படாத நீரிழிவு நோயானது, குழந்தையின் உடலில் சீர்குலைவு ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கும், அதனால் குழந்தைப் பெற்றுக்கொள்ள விரும்பும் நீரிழிவு நோய் உள்ள பெண்கள்,  முதலில் இரத்த சர்க்கரை/HbA1c அளவுகளைப் போதுமான அளவு கட்டுப்படுத்துவதை இலக்காக கொள்ள வேண்டும்
குழந்தைப் பெற்றுக்கொள்ள விரும்பினால், மருத்துவரிடம் முதலில் கலந்தாலோசிக்கவும்

இவற்றையும் பாருங்கள்: டயாபட்டீஸ் மெலிடஸுக்கான எங்கள் வளங்கள்