உங்கள் குடும்பத்திற்காகப் பரிந்துரைக்கப்படும் தினசரி கொழுப்பு அளவினைக் கணக்கிடவும்!

நாம் அதிக அளவிலான எண்ணெய் அல்லது கொழுப்பை உணவிலிருந்து பெறுகிறோமா? நம்மில் பலருக்கும், குறிப்பாக எடையைக் குறைக்க முயற்சிப்பவர்களுக்கு இது ஒரு பெரும் கவலையாக இருக்கிறது! நமது உணவுப் பழக்கம் காரணமாக உணவுப் பதிவுப் பயன்பாடுகள் அல்லது உணவுக் கொழுப்புக் கணக்கீட்டுக் கருவிகள், இந்திய சூழ்நிலையில் துல்லியமாக இருக்காது. மேற்கத்திய மக்களைப் போல் அல்லாமல், நாம் பிரண்டட் அல்லாத, வீட்டில் சமைக்கப்பட்ட அல்லது தாபாவில் வாங்கிய உணவுகளை அதிகமாகச் சாப்பிடுவதால், உணவில் எண்ணெயின் அளவு பரவலாக மாறுபடுகிறது!

எண்ணெய் மற்றும் கொழுப்புகள் நம் உணவில் கண்ணுக்குத் தெரியாத பகுதியாக இருப்பதுடன், அதிகளவு கலோரிகளையும் கொண்டுள்ளன. அதிகளவு எண்ணெய் என்பது சமச்சீராக இல்லாத உணவில் கலோரிகளின் அளவு அதிகரிப்பதாகும்.

உங்களது எண்ணெய் பயன்பாடு கட்டுக்குள் உள்ளதா என்பதை அறிய, உங்கள் குடும்பத்தில் ஒவ்வொரு மாதமும் எவ்வளவு எண்ணெய் பயன்படுத்தப்படுகிறது என்பதைக் கணக்கிடுவது ஒரு சிறந்த வழியாகும். இதைத்தான் குடும்பத்திற்கான FWI எண்ணெய் பயன்பாட்டு கால்குலேட்டர்செய்கிறது!

உங்கள் குடும்ப உறுப்பினர்கள் அனைவரின் எடை/உயரம், உடல் செயல்பாட்டு நிலைகள் உட்பட எல்லா விவரங்களையும் கால்குலேட்டர் எடுத்துக்கொண்டு, அதன் அடிப்படையில் ஒவ்வொருவரும் எடுத்துக்கொள்ள வேண்டிய எண்ணெயின் அளவைப் பரிந்துரைக்கும். பின்னர் இந்த நிலைகளைப் பயன்படுத்தி, உங்கள் குடும்பத்தில் ஒரு மாதத்திற்கு எந்தளவுக்கு எண்ணையைப் பயன்படுத்த வேண்டும் என்பதைக் கணக்கிட்டுப் பரிந்துரைக்கும்

உங்கள் குடும்பத்திற்குப் பரிந்துரைக்கப்படும் மாதாந்திர எண்ணெய் பயன்பாடு!

இதையும் பார்க்கவும்சமையல் எண்ணெயை எவ்வாறு தேர்வு செய்ய வேண்டும்