இந்திய ஆண்கள் மற்றும் பெண்களுக்கான BMI கால்குலேட்டர்: இங்கே கிளிக் செய்யவும்

BMI இன்டெக்ஸ், WC மற்றும் இந்த நெறிமுறைகளின்படி இந்தியர்களுக்கு உடல் பருமன் என்பது என்ன?

கீழே கொடுக்கப்பட்டுள்ள விளக்கத்தில் காண்க

BMI (பாடி மாஸ் இன்டெக்ஸ்)

BMI என்பது ஒருவரின் உடலிலுள்ள திசுவின் (தசை, கொழுப்பு மற்றும் எலும்பு) அளவைக் கணக்கிட்டு, அந்த மதிப்புகளின் அடிப்படையில் அவரைக் குறைந்த எடை கொண்டவர்சாதாரண எடை கொண்டவர்அதிக எடை கொண்டவர் அல்லது உடல் பருமன் கொண்டவர் என்று வகைப்படுத்தும் ஒரு முயற்சியாகும். இது ஒருவர் அதிக எடை கொண்டவர்/உடல் பருமன் கொண்டவர் என்பதை வரையறுப்பதற்காக, பெரிதும் ஏற்றுக்கொள்ளப்பட்ட முறையாகும்

மேற்கத்திய மக்களுக்கு வரையறுக்கப்பட்டுள்ள கட்ஆஃப் மதிப்புகள், இந்தியர்கள் அல்லது இந்திய துணைக்கண்டத்தில் வாழ்பவர்களுக்குப் பொருத்தமற்றது என்று கண்டறியப்பட்டுள்ளதுஇதே அளவு அல்லது இதைவிடக் குறைவான BMI அளவுகளைக் கொண்ட ஐரோப்பிய வெள்ளையர்களைவிட இந்தியர்கள் அதிக அளவு உடல் கொழுப்பை, அதிலும் அடிவயிற்றுக் கொழுப்பை உடையவர்களாக இருப்பதே இதற்குக் காரணம்.

எனவே, இந்தியர்களின் வெவ்வேறு உடல் வகைகளை வரையறுக்க குறைவான BMI கட்ஆஃப்கள் வரையறுக்கப்பட்டுள்ளன; இந்த வகைப்பாடு உலகச் சுகாதார மையத்தாலும் இந்திய மருத்துவ வல்லுனர்களாலும் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது

WC (இடுப்புச் சுற்றளவு)

உடல் முழுதும் பருமனாக இல்லாதவர்களுக்குக்கூட, வயிறு அல்லது அடிவயிறு பருத்திருப்பது ஆரோக்கியத்திற்குத் தீங்கு விளைவிக்கும் ஒரு காரணியாகும். இந்தியர்களில், இவ்வகையான உடல் பருமன் அதிகமாகக் காணப்படுகிறது. அத்துடன், இது மெட்டபாலிக் சிண்ட்ரோம் (வளர்சிதை மாற்றக் குறைபாடு) எனப்படும் பிரச்சனைக்கு வழிவகுக்கிறது. இடுப்புச் சுற்றளவு (WC) என்பது உங்களுக்கு வயிற்று பருமன் உள்ளதா இல்லையா என்பதை உறுதிப்படுத்துவதற்குத் தேவையான அளவீடு ஆகும். மீண்டும் சொல்லப்போனால், இந்தியர்களுக்கான WC இன் WC கட்ஆஃப்கள் மேற்கத்திய மக்களிலிருந்து வேறுபடுகின்றன

WCஐ அளவிட: ஒரு வளைந்து கொடுக்கும் தன்மையுள்ள டேப்பை பயன்படுத்தவும். உங்கள் இடுப்பு எலும்பின் மேற்பகுதியில் தொடங்கி, தொப்புள் மட்டத்தில் டேப்பைச் சுற்றி அளவெடுக்கவும். அது அதிக இறுக்கமாக இல்லாமலும் நேராக இருக்கும்படியும் பார்த்துக் கொள்ளவும். அளக்கும்போது உங்கள் மூச்சை இழுத்துப் பிடித்துக்கொள்ள வேண்டாம்

இந்தியர்களைப் பொருத்தவரை உடல் பருமன் என்பது என்ன: சர்வதேச BMI அட்டவணையுடன் இந்திய BMI அட்டவணையின் ஒப்பீடு

கீழ்கண்ட BMI அட்டவணை BMI மற்றும் WC இன் இந்திய கட்ஆஃப்களை சர்வதேச கட்ஆஃப்களுடன் ஒப்பிட்டுக் காட்டுகிறது

இந்திய மக்களில் அதிக எடையையும் உடல் பருமனையும் வகைப்படுத்தும் BMI அட்டவணை BMI WC சென்டிமீட்டர்களில்: ஆண்கள்/பெண்களுக்கு

 

WC இன்ச்களில்
குறைந்த எடை இந்தியர்களுக்கான BMI <18

சர்வதேச BMI<18.5

   
சாதாரண எடை இந்தியர்களுக்கான BMI

18-22.9

சர்வதேச அளவு

18.5-24.9

<78 செ.மீ இந்திய ஆண்களுக்கு/72 செ.மீ இந்தியப் பெண்களுக்கு

(சர்வதேச அளவு <102 செ.மீ ஆண்களுக்கு /88 செ.மீ பெண்களுக்கு)

<30.7 /28.3
அதிக எடை இந்தியர்களுக்கான BMI

23-24.9

சர்வதேச அளவு

25-29.9

 

>= 78/72 >=30.7 /28.3
உடல் பருமன் இந்தியர்களுக்கான BMI>25

சர்வதேச BMI>30

>= 90/80 >= 35.4/31.4
உடல் பருமனுக்கு மருந்து வாயிலாக அளிக்கப்படும் சிகிச்சை*      
                வேறு வாழ்க்கைமுறை நோய்கள்/ஆபத்துக் காரணிகள் இருந்தால் இந்தியர்களுக்கான BMI >25 (சர்வதேச அளவு 27)    
                வேறு எந்த ஆபத்துக் காரணிகளும் இல்லாதிருந்தால் >27 (30)    
உடல் பருமனுக்கான அறுவை சிகிச்சை*      
                வேறு வாழ்க்கைமுறை நோய்கள்/ஆபத்துக் காரணிகள் இருந்தால் >32.5 (35)    
                வேறு எந்த ஆபத்துக் காரணிகளும் இல்லாதிருந்தால் >37.5 (40)    
*முதலும் முக்கியமுமான நடவடிக்கை வாழ்க்கை முறையை நிர்வகித்தல் ஆகும், வாழ்க்கை முறை மாற்றங்கள் வாயிலாக உங்களால் எடையைக் குறைக்கவோ அல்லது கட்டுப்பாட்டில் வைத்திருக்கவோ இயலவில்லை என்றால், இந்தக் கட்ஆஃப்கள் குறித்து உங்கள் மருத்துவரிடம் கலந்தாலோசிப்பது நல்லது

பார்க்கவும்எடை நிர்வாகம் குறித்த பரிந்துரைகளுக்கான எங்கள் மூல ஆவணங்கள்

FHI BMI மற்றும் எடை குறைப்பு கால்குலேட்டரை இப்பொழுதே பயன்படுத்துங்கள்!

மேலும் படிக்கவும்:

இந்தியர்களில் காணப்படும் உடல் பருமன்

உடல் பருமன் காரணமாக ஏற்படும் உடல் நலம் சார்ந்த ஆபத்துகளைச் சமாளித்தல்

ஆரோக்கியமான முறையில் எடையைக் குறைப்பது எப்படி