மல்டிவைட்டமின்கள் அல்லது மீன் எண்ணெய் போன்ற கூடுதல் ஊட்டச்சத்து தேவையை எதிர்கொள்வதில், உலகில் இரண்டு வகையான மக்கள் உள்ளனர்: ஒரு வகையினர் மாத்திரையை எடுத்துக்கொள்வதன் மூலமாகவே ஆரோக்கியமான வாழ்க்கையைப் பெற முடியும் என்ற நம்பிக்கையோடு மிகவும் மகிழ்ச்சியாகத் தொடர்ந்து மாத்திரைகளை உட்கொள்கின்றனர். ஆனால், மற்றொரு வகையினரோ மருத்துவரால் பரிந்துரைக்கப்பட்டும் மருந்துகள் தங்களுக்குத் தேவையானவற்றைத் தரக்கூடியவைதானா என்பதற்குப் போதுமான ஆதாரங்களைத் தேடி அவை கிடைக்கும் வரை மாத்திரைகளை ஏற்க மறுக்கின்றனர்

ஆனால், மாத்திரைகளின்அவசியம், பாதுகாப்பு மற்றும் அந்த மாத்திரைகள் உண்மையிலேயே நமக்குத் தேவைப்படும் கூடுதல் ஊட்டச்சத்துக்களைத் தரக்கூடியவைதானா என்பதைப் பற்றியெல்லாம் நன்கு விசாரித்து, பின்னர் தேவையான மாத்திரைகளை உட்கொள்வது, உண்மையிலேயே மிகவும் அறிவார்ந்த அணுகுமுறையாகும்.

அறிவார்ந்த அணுகுமுறைகளுக்கான வழிகாட்டலையும், மேலும் அதிகப்படியான தரவுகளையும் கீழே காணலாம். இவற்றின் அடிப்படையில் உங்கள் சொந்த முடிவுகளை எடுக்கவும்!

நீங்கள் கூடுதல் ஊட்டச்சத்துக்களை எடுத்துக்கொள்ள வேண்டியிருந்தால், அது பற்றி பரிசீலிக்க வேண்டும்

வைட்டமின் மற்றும் தாது குறைபாடு ஏதேனும் எனக்கு உள்ளதா என்பதைத் தெரிந்துகொள்ள, சோதனைகளை மேற்கொள்ள வேண்டுமா?

உடல் நலத்திற்குத் தீங்கு விளைவிக்காத, மலிவான மற்றும் எளிதில் கிடைக்கக்கூடிய ஊட்டச்சத்துக்களை எடுத்துக்கொள்வது, அனுபவமிக்க அணுகுமுறையாக இருக்கும். உண்மையில், பெரும்பாலான கூடுதல் ஊட்டச்சத்துக்கள் அனுபவங்கள் வழியாகவே எடுத்துக்கொள்ளப்படுகின்றன (.கா. மல்டிவைட்டமினுக்கான துணை உணவுப் பொருட்கள்)

ஏதேனும் குறைபாடு இருக்கக்கூடும் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் சோதனை செய்து, ஊட்டச்சத்துக்களைப் பெறுவதற்காக சோதனை முடிவுகளுக்கு ஏற்ப துணை உணவுப் பொருட்களை எடுத்துக்கொள்வது வரவேற்கத்தக்கது. குறைபாட்டு நிலைகளின் (குறைவாக அல்லது தீவிரமாக) அடிப்படையில், அவற்றை எடுத்துக்கொள்ள வேண்டிய அளவும் கால அளவும் மாறுபடலாம் அல்லது அவற்றை அதிகமாக எடுத்துக்கொண்டால், சில தீங்குகள் ஏற்படக்கூடும்இரும்புச்சத்து, வைட்டமின் பி12, வைட்டமின் டி போன்றவை அடங்கிய இந்த இரண்டாவது பிரிவில் உள்ள ஊட்டச்சத்துக்கள் பெரும்பாலான மக்களுக்குப் பொருந்தும், மேலும் அறிந்துகொள்ள இந்த அட்டவணையைப் பார்க்கவும்

 தாது மற்றும் வைட்டமின் குறைபாடுகளைச் சோதனைகள் மூலம் கண்டறிய, HWI இன் பரிந்துரைகள்
ஊட்டச்சத்து சோதனை செய்வது அவசியம் தடுப்பு (அனுபவ அடிப்படையில்) மருந்து சிகிச்சைக்குத் தேவையான மருந்து அளவு

(நிறுவப்பட்ட குறைபாட்டில்)

இரும்புச்சத்து ஹீமோகுளோபின் & ஹேமடோகிரிட்

+/_

புற இரத்த அழுத்தம்

வயது வந்தவர்களுக்கு: 60 மில்லி கிராம் அடிப்படை இரும்புச்சத்து வயது வந்தவர்களுக்கு: இரும்புச்சத்துக் குறைபாடுள்ள இரத்தசோகை இருந்தால், 120-180 மில்லி கிராம் அடிப்படை இரும்புச் சத்து + 400 மைக்ரோ கிராம் ஃபோலிக் அமிலம்
வைட்டமின் பி12 வைட்டமின் பி12 இன் இரத்த அளவு மல்டிவைட்டமின்களைப் பெறுவதன் ஒரு பகுதியாக, தினமும் 6-25 மைக்ரோ கிராம்கள் சோதனை முடிவில் கடுமையான பாதிப்புகள் ஏதுமின்றி, வைட்டமின் பி12 குறைபாடு இருப்பதாகக் கண்டறியப்பட்டால், தினமும் 500-1000 மைக்ரோ கிராம்கள் என்ற வீதத்தில் குறைந்தபட்சம் இரண்டு மாதங்களுக்கு, வழக்கமான மல்டிவைட்டமினுக்கான துணை உணவுப் பொருட்களைத் தொடர்ந்து எடுக்க பரிந்துரைக்கப்படுகிறது

(வைட்டமின் பி12 குறைபாடுள்ள தீவிர இரத்தசோகை அல்லது மால்அப்சார்ப்ஷன் சிண்ட்ரோம்களின் விளைவாக இருந்தால், மருத்துவ ஆலோசனையைப் பெறுவது அவசியமாகும்)

வைட்டமின் டி 25-OH வைட்டமின் டி2 இரத்தப் பரிசோதனை பொதுவாக, கால்சியம் + வைட்டமின் டி துணை உணவுப் பொருட்களில் 200-400 .யூ. கண்டறியப்பட்டுள்ளது ஊட்டச்சத்து அளவு மிகக்குறைவாக இருந்தால் <10 ng/dl, உங்கள் மருத்துவர் அதிக அளவிலான துணை உணவுப் பொருட்களைப் பரிந்துரைக்கலாம் (ஒரு மாதத்தில் மூன்று வாரங்களுக்கு 50,000 .யூ.), பின்னர் தினமும் 800-2000 .யூ. அளவிலான துணை உணவுப் பொருட்களைத் தொடர்ந்து எடுக்குமாறு பரிந்துரைக்கலாம்

மிதமான மற்றும் குறைந்த அளவு குறைபாடுகள் இருந்தால், அதாவது இரத்த அளவு 25 ng/dLஐவிட குறைவாக இருப்பது ஆனால், 10ng/dLஐவிட அதிகமாக இருக்க வேண்டும். சரியான வீதத்தில், அதிக அளவிலான துணை உணவுப் பொருட்களைக் குறைந்த எண்ணிக்கையில் எடுத்துக்கொள்வது மிகவும் அவசியமாகும்

இதை உறுதிசெய்யவும்: உங்களுக்கான துணை உணவுப் பொருட்களைச் சரியாக எடுத்துக்கொள்ளுதல்

வைட்டமின்களின் பட்டியல்

பார்க்கவும்: துணை உணவுப் பொருட்கள் பரிந்துரைகளுக்கான எங்களது மூல ஆவணங்கள்