இன்றைய காலக்கட்டத்தில் நாம் செய்யும் வேலையும் நமது குடும்ப வாழ்க்கையும் நமக்கு மிகுந்த மன அழுத்தத்தைத் தருவதாக இருப்பதுடன், அதைப் பற்றி நாம் சிந்திப்பதற்கோ, நம்மை கவனித்துக்கொள்வதற்கோ நமக்குப் போதிய நேரம் தருவதில்லை. இவை உயர் இரத்த அழுத்தம், இதயப் பாதிப்புகள் போன்ற நோய்களுக்கு நம்மை ஆளாக்கிவிடுகின்றன

இன்றைய இயந்திர உலகில் மனச்சோர்வும், பதட்டமான மனநிலையும் நாம் கற்பனை செய்து பார்க்க முடியாத அளவுக்கு மிகவும் சாதாரணமான நிகழ்வுகளாகிவிட்டன. நம்மில் சிலர், பெரும்பாலான நேரங்களில் சோர்வுடன் அல்லது மனக்கலக்கத்துடன் இருப்பதாக உணர்ந்தாலும், நமது சமுதாயம் தவறாக நினைத்துவிடக் கூடாது என்ற ஒருவித பயம் அல்லது வாழ்க்கையை முன்னேற்றிச் செல்வதில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள முயற்சிப்பது போன்ற காரணங்களால், தங்களைச் சுய மதிப்பீடு செய்துகொள்வதைக் கைவிட்டுவிடுகின்றனர்

ஆனால், இதற்குச் சுய மதிப்பீட்டுக் கேள்வித்தாள்கள் மிகவும் உதவியாக உள்ளன. இவை மதிப்பீடு செய்யப்படும், மேலும் இதுபோன்ற மனநிலையில் உள்ளவர்களுக்கான ஒரு சோதனை கருவியாக மருத்துவ நடைமுறையில் பொதுவாகப் பயன்படுத்தப்படுகின்றன. கொடுக்கப்பட்டுள்ள நான்கு கேள்விகளுக்கும் நீங்கள் பதிலளித்ததும், இப்போது செய்வது போன்றே சுய மதிப்பீடு செய்வதைக் கைவிட்டுவிடலாமா அல்லது ஆலோசனையைப் பெற வேண்டுமா என்பது தொடர்பான தகவல் உடனடியாகத் தெரிவிக்கப்படும்

‘PHQ 2’, ‘GAD 2’ ஆகிய இரண்டும் இத்தனைய சுய மதிப்பீட்டுச் சோதனைகள் ஆகும். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், கேள்விகளைப் பார்த்ததும் பதிலை வழங்குவதாகும் (அதிகம் சிந்திக்காமல்), உங்கள் பதிலைப் பொறுத்து அடுத்தடுத்த செயல்கள் பரிந்துரைக்கப்படும்

PHQ 2: (சரியான பெட்டியைத் தேர்வுசெய்யவும்)

கடந்த இரண்டு வாரங்களில், பின்வருவனவற்றில் எந்தப் பிரச்சனைகளுக்காக நீங்கள் அடிக்கடிக் கவலைப்பட்டீர்கள்? ஒருபோதுமில்லை பல நாட்கள் அரை நாட்களுக்கு மேலாக கிட்டத்தட்ட எல்லா நாளும்
1. செயல்களைச் செய்வதில் குறைவான ஆர்வம் அல்லது மகிழ்ச்சி        
2. சோர்வு, மன அழுத்தம் அல்லது நம்பிக்கையற்ற மனநிலை        

GAD 2: (சரியான பெட்டியைத் தேர்வுசெய்யவும்)

கடந்த இரண்டு வாரங்களில், பின்வருவனவற்றில் எந்தப் பிரச்சனைகளுக்காக நீங்கள் அடிக்கடிக் கவலைப்பட்டீர்கள்? ஒருபோதுமில்லை பல நாட்கள் அரை நாட்களுக்கு மேலாக கிட்டத்தட்ட எல்லா நாளும்
1. பதட்டமாக, மனக்கலக்கமாக அல்லது கைவிடப்பட்ட நிலையில் இருப்பதாக உணர்தல்        
2. கவலைப்படுவதைக் கட்டுப்படுத்த முடியாத நிலையில் இருத்தல்        

இந்தக் கேள்விகளுக்கு உங்கள் மனதிற்குள்ளேயே ஏற்கனவே பதில் அளித்திருக்கிறீர்களா? இப்போது அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதைத் தெரிந்துகொள்ள, இங்கே கிளிக் செய்யவும்