இப்போது கர்ப்பிணி பெண்களுக்கான FWI ஆரோக்கிய உணவுமுறை விளக்கப்படத்தைப்பெறவும்!

அல்லது மேலும் தகவலுக்கு, கீழே படிக்கவும்

கர்ப்பக் காலத்தில் எந்தளவுக்கு ஆரோக்கியமான உணவைக் கூடுதலாக எடுத்துக்கொள்வது அவசியம்?

கர்ப்பக் காலத்தின் போது வழங்கப்படுகின்ற ஆரோக்கியமான உணவுத் திட்டமானது, கருவில் உள்ள உங்கள் குழந்தை நன்றாக வளர்வதற்குத் தேவையான அனைத்தையும் வழங்குவதற் ஏற்ப வடிவமைக்கப்பட்டதாக இருக்க வேண்டும். இருப்பினும், இருவருக்கும் சேர்த்து சாப்பிட வேண்டும் என்ற பழைய கூற்று கண்டிப்பாக உண்மை இல்லை!  கர்ப்பக் காலத்தில் உங்களுக்குக் கூடுதல் கலோரி தேவை. ஆனால், அதைவிட முக்கியமாக அதிக புரதங்கள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் தேவை. கர்ப்பக் காலத்தின் போது சீரான உணவு முறையைக் கடைப்பிடிப்பதை உறுதிசெய்யும் வகையில், இந்த ஊட்டச்சத்துக்கள் சரியாக எந்தளவுக்குத் தேவை என்பதைப் பற்றி தெரிந்துகொள்ள, கீழே உள்ள அட்டவணையைப் பார்க்கவும்

எந்தளவுக்குக் கூடுதலாக உணவை உட்கொள்ள வேண்டும் மற்றும் எந்த ஊட்டச்சத்துக்களை அதிகம் சாப்பிட வேண்டும் என்பதைப் பின்வரும் அட்டவணையிலிருந்து தெரிந்துகொள்ளலாம். இந்த ஊட்டச்சத்துக்களை நீங்கள் பெறுவதை உறுதிசெய்ய, வழக்கமான உணவில் என்னென்ன சேர்க்க வேண்டும் என்பதையும் இது விளக்குகிறது

பெரிதாக எதுவும் செய்ய வேண்டாம். நீங்கள் சீரான உணவு முறையைக் கடைப்பிடிப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்

கர்ப்பக் காலத்தில் ஐயோடின் கலந்த உப்பை எடுத்துக்கொள்வது அவசியமாகும்

உப்புக் கட்டுப்பாட்டைத் தவிர்க்க வேண்டும்

மேலும், இந்திய பெண்கள் தைராய்டு செயல்பாடுகளைப் (இரத்த டி.எஸ்.எச் நிலைகள்) பரிசோதித்துக் கொள்வது நல்ல யோசனை

சீரான உணவு கூடுதல் தேவைகளை வழங்க வேண்டும்

சைவ உணவு உண்பவர்கள் அல்லது எப்போதாவது இறைச்சி உண்பவர்களுக்கு வைட்டமின் பி12 குறைபாடு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். இதை உணவு மூலம் மட்டும் சரிசெய்ய முடியாது என்பதால், வைட்டமின் பி12 தேவைகளுக்கு உங்கள் மருத்துவரைக் கலந்தாலோசிக்கவும்

கர்ப்பம் தரிக்கத் திட்டமிட்டுள்ள பெண்கள் தினமும் 400 மைக்ரோ கிராம் ஃபோலிக் அமிலத்தை மூன்று மாதங்கள் வரை தினமும் எடுத்துக்கொள்ள வேண்டும் மற்றும் கர்ப்பக் காலத்தில் அதைத் தொடர்வதற்கு மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது அவசியம்

சில பெண்கள், .கா. நீரிழிவு அல்லது சில பிறப்புக் குறைபாடுகளுடன் குழந்தைகளை வைத்திருப்பவர்கள், மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது அவசியம்

நீங்கள் வைட்டமின் ஏ எடுத்துக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறீர்கள் என்றால், அவற்றை ரெட்டினால் வடிவங்களைத் தவிர்த்து, கரோட்டினாய்டு வடிங்களில் எடுத்துக்கொள்ளவும்

வைட்டமின் ஏ சத்தைப் பெற, பச்சை இலை மற்றும் சிவப்புஆரஞ்சு காய்கறிகள் மற்றும் இறைச்சியை உண்ணுங்கள்

 

கர்ப்பிணிப் பெண்களுக்கான உணவுக் கையேடு: கர்ப்பக் காலத்தின் போது அன்றாட உணவில் எடுத்துக்கொள்ள வேண்டிய கலோரிகள் மற்றும் புரதங்களின் கூடுதல் தேவைகள்
   1வது மூன்று மாதங்களில்  2வது மூன்று மாதங்களில்  3வது மூன்று மாதங்களில்
கலோரிகள் 70-85 230-280 390-470
புரதங்கள் 0.5 கிராம் 6.9 கிராம் 22.7 கிராம்
இவற்றை மேற்கொள்ள, நீங்கள் கூடுதல் உணவைச் சாப்பிட வேண்டும்
  • ஒரு டம்ளர் கூடுதல் பால் மற்றும்
  • 1 பகுதி அளவு கொட்டைகள் (30 பாதாம், 50 பிஸ்தா, 50 வேர்க்கடலை, 18-20 முந்திரி பருப்புகள், 8 அரை அக்ரூட் பருப்புகள் அல்லது 28-30 கிராம் எடையுள்ள அக்ரூட் பருப்புகள்)
ஒரு டம்ளர் கூடுதல் பால் மற்றும்

ஒரு பகுதி அளவு கொட்டைகள்

½ கப் (100 மில்லி) கெட்டியான தால் அல்லது 2 தீப்பெட்டி அளவுள்ள இறைச்சி/மீன் துண்டுகள்

¼ துண்டு டோஃபு அல்லது 1 முட்டை

கொழுப்புகள்

அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள்:

ஒமேகா 3 கொழுப்பு அமிலங்களை தாராளமாக உட்கொள்ளலாம்

  குறைந்தபட்சம் வாரம் இருமுறை மீன் சாப்பிடலாம்

சைவ உணவு உண்பவர்கள் அக்ரூட் பருப்புகள், கடுகு விதைகள், வெந்தய விதைகள் அல்லது கடுகு எண்ணெய், கனோலா எண்ணெய் அல்லது சோயா எண்ணெய் பயன்படுத்தலாம்

குறைந்தபட்சம் வாரம் இருமுறை மீன் சாப்பிடலாம்

சைவ உணவு உண்பவர்கள் அக்ரூட் பருப்புகள், கடுகு விதைகள், வெந்தய விதைகள் அல்லது கடுகு எண்ணெய், கனோலா எண்ணெய் அல்லது சோயா எண்ணெய் பயன்படுத்தலாம்

தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள் கூடுதல் தேவை இதை எப்படிப் பூர்த்திசெய்வது
இரும்புச்சத்து அதிகபட்சம் 66% இரண்டாவது மூன்று மாதங்களில் இருந்து இரும்புச்சத்துக்கள் உங்களுக்குத் தேவைப்படும், கர்ப்பிணிப் பெண்கள் குறைந்தது 100 நாட்களுக்கு 100 மில்லி கிராம் இரும்புச்சத்துக்களை எடுத்துக்கொள்வது அனீமியாவைத் தவிர்ப்பதற்கு என்று இந்திய RCH கையேடு கூறுகிறது

அனீமியா நோயுள்ள பெண்களுக்குக் கூடுதலான தேவையிருப்பதால், மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது அவசியம்

கால்சியம் இரண்டு மடங்கு தேவை கர்ப்பிணிப் பெண்களுக்குக் கால்சியம் (வைட்டமின் டி உடன் சேர்த்து) கூடுதலாகப் பரிந்துரைக்கப்படுகிறது அயோடின் அதிகபட்சம் 33% ஃபோலிக் அமிலம் 2.5 மடங்கு வைட்டமின் ஏ அதிகபட்சம் 33% வைட்டமின் டி அதே அளவு. இந்தியப் பெண்களில் பெரும்பாலோனோருக்கு இந்தக் குறைபாடுகள் ஏற்கனவே இருக்கின்றன, அவற்றைக் கவனித்துக் கொள்ளவது அவசியம் அத்துடன், கால்சியம் கூடுதலாக எடுத்துக்கொள்ள பரிந்துரைக்கப்படுகிறது பிற வைட்டமின்கள் பி காம்ப்ளக்ஸ் வைட்டமின்கள், வைட்டமின் சி, இ ஆகியவை 20-50% அதிகப்படியாகத் தேவைப்படுகிறது. பச்சை இலை மற்றும் சிவப்புஆரஞ்சு காய்கறிகள், முட்டை மற்றும் இறைச்சி அல்லது அதற்கு இணையான உணவுகளை அதிகளவில் உட்கொள்ளும் போது இந்தச் சத்துக்களை அதிகரிக்க முடியும்
கர்ப்பக் காலத்தின் போது நீங்கள் கூடுதலாக எடுத்துக்கொள்ள வேண்டியவை

1. ஃபோலிக் அமிலம்: கருத்தரிப்பிற்கு முன்பிருந்தே, கர்ப்பம் தரித்த முதல் மூன்று மாதங்கள் வரை தினமும் 400 மைக்ரோ கிராம் எடுத்துக்கொள்ள வேண்டும்

2. இரும்புச்சத்து (60 மில்லிகிராம்) + ஃபோலிக் அமிலம் 200 மைக்ரோ கிராம் காப்ஸ்யூல்கள் (ஜின்ங்க் போன்றவை இருக்கலாம்), 2 வது மூன்று மாதங்களிலிருந்து தினமும் இரண்டு காப்ஸ்யூல்கள் குறைந்தது 100 நாட்களுக்கு எடுத்துக்கொள்ள வேண்டும், பொதுவாக கர்ப்பக் காலம் முழுவதும் மற்றும் அதன்பிறகு மூன்று மாதங்கள்கூட எடுத்துக்கொள்ளலாம்

3. ஆர்டிஏ ஆல் அனுமதிக்கப்பட்ட அளவு வைட்டமின் ஏ, பி காம்ப்ளக்ஸ், சி உள்ள மல்டிவைட்டமின் காப்ஸ்யூல், தினமும் ஒரு முறை எடுத்துக்கொள்ள வேண்டும்

4. கால்சியம்+வைட்டமின் டி (500 மில்லிகிராம் + 200 .யூ.), இரண்டாவது மூன்று மாதங்களிலிருந்து ஒரு நாளைக்கு இரண்டு முறை எடுத்துக்கொள்ள வேண்டும், பொதுவாக கர்ப்பக் காலம் முழுவதும் மற்றும் அதன்பிறகு மூன்று மாதங்கள்கூட எடுத்துக்கொள்ளலாம்

இப்போது கர்ப்பிணி பெண்களுக்கான FWI உணவுத் திட்டத்தைப்பெறவும்!

பார்க்கவும்: கர்ப்பக் கால பாதுகாப்புக்கான எங்களது மூல ஆவணங்கள்