தாய்ப்பாலூட்டுவதை எப்போது நிறுத்தலாம்?

குழந்தை பிறந்து ஆறு மாதங்களான பிறகும், அதற்குத் தாய்ப்பால் மட்டுமே போதுமான ஊட்டச்சத்துக்களை வழங்க முடியாது. குறிப்பாகப் போதுமான கலோரிகள், இரும்புச்சத்து, வைட்டமின் ஏ, பி12 மற்றும் புரதம் போன்ற ஊட்டச்சத்துக்களைப் பெறுவதில் அதற்குப் பற்றாக்குறை ஏற்படக்கூடும். ஆகையால், குழந்தை பிறந்து ஆறு மாதங்களான நாள் முதல் தாய்ப்பாலூட்டுவதை நிறுத்தும்படி உங்கள் குழந்தைநல மருத்துவர் அறிவுறுத்துவார். ஆனால், இளம் குழந்தைக்குத் தாய்ப்பாலூட்டுவதை நிறுத்துவது என்பது அவ்வளவு எளிதானதல்ல என்றாலும், இதுதான் ஊட்டச்சத்துக் குறைபாடுகள் ஏற்படுவதற்கான காலம் என்று WHO அறிக்கைகள் கூறுகின்றன!

தாய்ப்பாலூட்டுவதை நிறுத்தும் போது, அதற்கு மாற்றாக கொடுக்க வேண்டிய சரியான உணவு என்ன?

  1. மசித்த உருளைக்கிழங்கு, மசித்த வாழைப்பழம் அல்லது ஒவ்வொரு முறையும் 2-3 ஸ்பூன் தாய்ப்பாலுக்கு இணையான மாற்று பால் உணவுகளைக் கொடுக்கத் தொடங்கலாம் மற்றும் ஒவ்வொரு 2-3 நாட்களுக்கும் உணவுப் பொருட்களின் அளவை அதிகரித்துகொள்ளலாம்
  2. ஒரு குழந்தையின் வயிற்றுக் கொள்ளளவு கிட்டத்தட்ட அக்குழந்தையின் எடையில் 30 மடங்காக இருக்கும். உதாரணமாக, எட்டு கிலோ எடையுள்ள ஒரு குழந்தையின் வயிற்றுக் கொள்ளளவு 240 மில்லி அளவுதான் இருக்கும். ஆகையால், அக்குழந்தைக்கு ஒவ்வொரு முறையும் கொடுக்கப்படும் உணவு அந்தக் கொள்ளளவைவிட அதிமாக இருக்கக்கூடாது
  3. மிகக் குறைந்த அளவில் எண்ணெய் அல்லது சர்க்கரையைச் சேர்த்து, உணவுப் பொருட்களின் அடர்த்தியை அதிகரிக்க முடியும்
  4. வெவ்வேறு உணவு வகைகளைக் கண்டிப்பாகச் சேர்க்க வேண்டும்:
  • பால், தயிர், பாலாடைக்கட்டி போன்றவை கால்சியம், புரதங்கள் மற்றும் வைட்டமின் பி12 உள்ளிட்ட பி காம்ப்ளக்ஸ் போன்றவற்றின் அளவை அதிகரிக்கும்
  • பயிறு வகைகள் புரதம், இரும்புச்சத்து மற்றும் ஃபோலிக் அமிலம் போன்றவற்றைத் தருகின்றன, மேலும் அவற்றுடன் தக்காளி அல்லது எலுமிச்சை சாறு சேர்க்கும்போது வைட்டமின் சி கிடைக்கிறது, இது இரும்புச்சத்தை உறிஞ்சுவதற்கு உதவுகிறது
  • ஆரஞ்சு காய்கறிகளான கேரட், பூசணி மற்றும் பச்சை இலைக் காய்கறிகளான ஸ்பினாச் போன்றவை வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி ஆகியவற்றை தருகின்றன
  • முட்டை, ஈரல், இறைச்சி போன்ற உணவுகள் இரும்புச்சத்து, ஜின்ங்க், புரதம், வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் பி12 போன்றவற்றை அதிகரிக்கிறது; சைவ உணவு உண்பவர்கள் இந்தச் சத்துக்களை அதிகரிப்பதற்குத் தேவையான மாற்று உணவுகளைக் கட்டாயம் சேர்த்துக்கொள்ள வேண்டும்

தாய்ப்பாலூட்டுவதை நிறுத்தும் போது கவனிக்கப்பட வேண்டியவை: உங்கள் குழந்தை வளரும் போது சாப்பிடத் தேவைப்படும் உணவு எவ்வளவு?

வயது தாய்ப்பாலுக்குப் பதிலாகக் கொடுக்கும் உணவிலிருந்து ஒரு நாளைக்குத் தேவைப்படும் கலோரிகள்* உணவின் வகை ஒரு நாளைக்கு எத்தனை முறை உணவு கொடுக்க வேண்டும் ஒவ்வொரு முறையும் குழந்தைக்குக் கொடுக்க வேண்டிய உணவின் அளவு
6-8 மாதங்கள் 200 மசித்த வாழைப்பழம், வேகவைத்த உருளைக்கிழங்குடன் எண்ணெயும், உப்பும் சேர்த்தது, கிச்சடி, தாலியா போன்ற கெட்டியான மசித்த உணவுகள் 2-3 வேளை

குழந்தைக்குத் தொந்தரவு ஏதும் இல்லையென்றால் 1-2 தின்பண்டங்களைக் கொடுக்கலாம்

2-3 ஸ்பூன் அளவுடன் தொடங்கவும்

அரை கப்/கிண்ணம் கூடுதலாக்கவும் (240 மில்லி கப்/கிண்ணம்)

9-11 மாதங்கள் 300 மசித்த உணவுடன் மாவு உணவு மற்றும் விரல்களால் உண்ணும் உணவைச் சேர்க்கவும்

நன்றாக வேகவைத்த முட்டை மற்றும் இறைச்சியை நன்கு மசித்துக் கொடுக்கலாம்

3-4 வேளை

குழந்தைக்குத் தொந்தரவு ஏதும் இல்லையென்றால் 1-2 தின்பண்டங்களைக் கொடுக்கலாம்

½ – ¾ கிண்ணம்
12-23 மாதங்கள் 550 பாரம்பரிய உணவு கொடுக்கும் போது, அவசியமானால் மசித்து கொடுக்கலாம். ஆனால் திட /மாவு உணவுகளைக் கொடுப்பது நல்லது 3-4 வேளை

குழந்தைக்குத் தொந்தரவு ஏதும் இல்லையென்றால் 1-2 தின்பண்டங்களைக் கொடுக்கலாம்

3/4 கிண்ணம் ஒவ்வொரு வேளையும்
*குழந்தைக்குத் தாய்ப்பாலிலிருந்து கிடைக்கும் கலோரிகளைவிட இவை அதிகமானவை
குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுக்கப்படாவிட்டால்: கூடுதலாக 1-2 கப் (240 மில்லி கப்) பால் மற்றும் 1-2 வேளை உணவு கட்டாயம் கொடுக்க வேண்டும்
**ஒவ்வொரு முறை உணவூட்டும்போதும், குழந்தைக்கு போதுமானாதாக உள்ளதா என்பதையும், குழந்தையின் பசி மற்றும் வயிறு நிரம்பியதற்கான நிலையையும் சரியாகப் புரிந்துகொண்டு செயல்பட குழந்தையின் தாய் அறிந்திருக்க வேண்டும்