உங்களுக்கு ஏற்கனவே உங்கள் எடையைக் கட்டுப்பாட்டில் வைப்பதற்கு, உடற்பயிற்சியின் முக்கியத்துவமும், “நலமுடன் இருப்பது” பற்றியும் தெரிந்திருக்கலாம். ஆனால் உடற்பயிற்சியின் பலன்கள் இதை விடவும் மிகவும் அதிகமானவை!

உடல் செயல்பாடுகள் மற்றும் உடல்நலம் தொடர்பான அமெரிக்க சர்ஜன் ஜெனரலின் அறிக்கையின்படி, சோம்பல் அதிகம் உடைய செயல்படாத மக்களுக்கு, சுறுசுறுப்பான மக்களை விடவும் இதய நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் இருமடங்கு அதிகம் என்று தெரியவருகிறது. இதய நோய்க்கான உங்கள் அபாயத்தை அதிகரிக்கக் கூடிய வேறு எந்த நிலைமைகளும் பழக்கங்களும் உங்களுக்கு இல்லையென்றாலும் இது உங்களுக்குப் பொருந்தும்.

உடற்பயிற்சிகள் உங்கள் இதயம் மற்றும் தசைகளின் நலத்தை அதிகரிப்பது மட்டுமின்றி, இரத்தம் தொடர்பான அபாயக் காரணிகளான கொலஸ்ட்ரால் மற்றும் BP ஆகியவற்றையும் குறைக்கின்றன. மேலும், உடற்பயிற்சி மனநிலையையும் மேம்படுத்தும் பலன்கள் கொண்டது.

ஆரோக்கியமான நபர்களுக்கு உடற்பயிற்சியின் முக்கியத்துவம்:

உங்களுக்கு உடல்நல அபாயங்கள் அல்லது வாழ்க்கைமுறை சார்ந்த நோய்கள் எதுவும் இல்லையென்றாலும், உடற்பயிற்சியானது, பின்வரும் நோய்கள் வருவதற்கான அபாயத்தைக் குறைப்பதற்கு உதவும்:

 • வகை 2 நீரிழிவு
 • இரத்த அழுத்தம்
 • CHD (ஏத்தெரோஸ்கெலரோட்டிக் இதய நோய்)
 • சில வகை புற்றுநோய்கள் (மார்பகம் மற்றும் குடல் புற்றுநோய்)
 • ஆஸ்டியோபோரோசிஸ்:  எலும்புகளின் உறுதியைக் காப்பதற்கு உடற்பயிற்சி உதவும் மற்றும்
 • மனநலத்திற்கும் உதவும்: உடற்பயிற்சி மனநிலை, வாழ்க்கையின் தரம் ஆகியவற்றை மேம்படுத்துகிறது மற்றும் சில ஆராய்ச்சிகளில் இது மன அழுத்தத்தைக் குறைப்பதற்கும் உதவுகிறது என்று காட்டப்பட்டுள்ளது

ஆனால் உங்களுக்கு உடல்பருமன், மெட்டாபாலிக் சிண்ட்ரோம் அல்லது இதய நோய் போன்ற உடல்நல அபாயங்கள் ஏற்கனவே இருந்தால், முறையான உடற்பயிற்சி உங்கள் அபாயங்களை இன்னும் திறம்பட கட்டுப்படுத்த உதவும் மற்றும் ஆயுள் நீண்டிருப்பதற்கும் பெரும்பாலும் உதவுகிறது!

உடற்பயிற்சியும், இரத்த அழுத்தம் மற்றும் அதிக இரத்த கொலஸ்ட்ரால் நோய்களும்

முறையான ஏரோபிக் உடற்பயிற்சிகள் மூலம் உடலை முறைமைப்படுத்துவது, ஓய்வின் போதும், எந்தவொரு குறிப்பிட்ட உடற்பயிற்சி அளவின்போதும் இரத்த அழுத்தம் மற்றும் இதயத்துடிப்பு ஆகியவற்றைக் குறைக்கிறது

ஏரோபிக் உடற்பயிற்சி திட்டங்கள், இரத்த அழுத்தம் மிதமான அளவுக்கு குறைவடைவதை உறுதி செய்கின்றன, குறிப்பாக அதிக ரத்த அழுத்தம் உடையவர்களுக்கு உதவுகிறது. லிப்பிட் புரொஃபைல் மேம்படுவதற்கும் வழிவகுக்கிறது: அதாவது மொத்த இரத்த கொலஸ்ட்ராலின் அளவு, சீரம் டிரைகிளிசரைடுகள் மற்றும் கெட்ட (LDL) கொலஸ்ட்ரால் மற்றும் ஆகியவை குறைவடைவது மற்றும் நல்ல (HDL) கொலஸ்ட்ரால் அதிகரிப்பது. இன்சுலின் தாங்குதிறன், ரத்த சர்க்கரை அளவுகள் மற்றும் ரத்தம் கெட்டியாதல் ஆகியவற்றிலும் உடற்பயிற்சி சாதகமான பலன்களைக் கொண்டிருப்பதற்கு ஆதாரங்கள் உள்ளன.

அதிக BP மற்றும் அதிக ரத்த கொலஸ்ட்ரால் ஆகியவை உள்ள நபர்களுக்கு, உடற்பயிற்சியானது C-ரியாக்டிவ் புரொட்டீனையும் குறைக்கிறது, இது உடலில் ஏற்படும் அழற்சி மற்றும் CHD அபாயம் ஆகியவற்றின் குறிப்பானாகும்

ஏற்கனவே ஆன் ஜினா அல்லது இதய அடைப்பு ஏற்பட்டுள்ளவர்களுக்கும், ஆயுளை நீட்டிக்கும், செயல்பாடு மற்றும் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் முறைகளில் ஒன்றாக உடற்பயிற்சி இருக்கிறது, ஆனால் இந்தச் சூழல்களில் இதனை மருத்துவ மேற்பார்வையில் தொடங்க வேண்டும், எச்சரிக்கையுடன் மேற்கொள்ள வேண்டும்

உடல்பருமன், நீரிழிவு மற்றும் மெட்டாபாலிக் சிண்ட்ரோம் மற்றும் உடற்பயிற்சி

உடல்பருமனான மக்களுக்கு, மெட்டாபாலிக் சிண்ட்ரோம் மற்றும் நீரிழிவு (அல்லது நீரிழிவு முன்நிலை) ஆகியவை உள்ளடங்கலாக, உடல்நலக் கோளாறுகளுக்கான முக்கியமான காரணங்களில் இன்சுலின் தாங்குதிறனும் உள்ளது, இது இந்த நிலைமையில், உடல் செல்களால், உடல் சர்க்கரைகள் மற்றும் கொழுப்புகளை சமநிலையில் வைக்க இன்சுலினைப் பயன்படுத்த முடியாமல் போகும். உடற்பயிற்சியானது இன்சுலின் உணர்திறனை மேம்படுத்துகிறது, இதன்மூலம் ரத்த சர்க்கரை மற்றும் HbA1c அளவுகள், BP, கொலஸ்ட்ரால் போன்றவற்றைக் குறைக்கிறது. மேலும் இது மருந்துகளின் தேவை/அளவையும் குறைக்கக் கூடும்

உடற்பயிற்சி மற்றும் எடை/உடல் கொழுப்பு இழப்பு மற்றும் தசை திரட்சி அதிகரிப்பு

மேலே ஏரோபிக் உடற்பயிற்சிக்காகத் தரப்பட்ட எல்லா பலன்களும், தாங்குதிறன் உடற்பயிற்சிகளுக்கும் பொருந்தும், மேலும் தாங்குதிறன் உடற்பயிற்சிகள் பின்வருவதற்கும் உதவும்:

 1. தசை திரட்சியைக் கட்டமைத்தல் மற்றும் பராமரித்தல்
 2. உடல் கொழுப்பு இழத்தல், குறிப்பாக அடிவயிற்று கொழுப்பு இழப்பு
 3. எலும்பின் வலிமையைப் பராமரித்தல்

உடற்பயிற்சி மற்றும் புற்றுநோய்

குடல் புற்றுநோய் அபாயம் மற்றும் உடற்பயிற்சி

உடல் செயல்பாடுகளை அதிகரித்து வரும் நபர்களுக்கு, சோம்பலான உடல் செயல்பாடுடையவர்களை விட குடல் புற்றுநோய் (பெருங்குடல் புற்றுநோய்) வருவதற்கான அபாயம் 30 முதல் 40 சதவீதம் குறைவடைகிறது என்று பல ஆய்வுகளில் தொடர்ந்து அறியப்பட்டு வருகிறது, இதில் BMI அல்லது உடல் எடை எந்த தாக்கமும் கொண்டிருப்பதில்லை.

குடல் புற்றுநோயில் இருந்து பாதுகாப்பதற்கு தினமும் 30 முதல் 60 நிமிடங்கள் வரை மிதமானது முதல் கடுமையான உடல் செயல்பாடுகள் தேவைப்படும்

மார்பகப் புற்றுநோய் அபாயம் மற்றும் உடற்பயிற்சி

செயல்பாடுகள் குறைவாக உள்ள பெண்களை விடவும், உடல் செயல்பாடுகள் அதிகம் உடைய பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் வருவதற்கான அபாயம் குறைவாக இருப்பதாகப் பெரும்பாலான ஆய்வுகள் தெரிவிக்கின்றன ஆனாலும், உடல் செயல்பாட்டின் மூலமாக எட்டப்படும் அபாயம் குறைவடையும் அளவு பெரிய அளவில் வேறுபடுகிறது (20 முதல் 80 சதவீதம்). மிதமான அல்லது தீவிரமாக உடல் செயல்பாடு உள்ள இளம்பருவ பெண்கள் மற்றும் இயல்பான உடல் எடை கொண்ட பெண்கள் ஆகியோரிடையே இந்தப் பலன்கள் அதிக அளவில் உள்ளதாகத் தெரிகிறது!

எண்டோமெட்ரியல் புற்றுநோய் அபாயம் மற்றும் உடற்பயிற்சி

எண்டோமெட்ரியல் புற்றுநோய் அபாயத்தில் உடல் செயல்பாட்டின் பங்கைப் பற்றி சுமார் 20 ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இவற்றின் முடிவுகளில், உடற்பயிற்சியின் மூலம் எண்டோமெட்ரியல் புற்றுநோயின் அபாயத்தை 20 சதவீதம் முதல் 40 சதவீதம் குறைக்கலாம் என்று தெரியவந்துள்ளன

உடற்பயிற்சி மற்றும் மன அழுத்தம் / மன நலம்

மெதுவான ஓட்டம் (ஜாகிங்), நீச்சல், சைக்கிளிங், நடத்தல், தோட்ட வேலை மற்றும் நடனம் போன்ற ஏரோபிக் உடற்பயிற்சிகள், மன அழுத்தம் மற்றும் கவலையைக் குறைப்பதாக நிரூபிக்கப்பட்டுள்ளன. மன அழுத்தம், கவலை மற்றும் எதிர்மறை மனநிலை ஆகியவற்றை உடற்பயிற்சி சரிசெய்கிறது, மேலும் சுய மரியாதை மற்றும் மனக்குவிப்பு செயல்பாட்டை மேம்படுத்துகிறது

இந்தத் தாக்கமானது, HPA (ஹைப்போதலாமிக்-பீட்யூட்டரி-அட்ரீனல்) அச்சானது மூளையின் பல்வேறு பகுதிகளுடன் தகவல் பரிமாறுவதால் கடத்தப்படலாம் என்று கருதப்படுகிறது, இதில் ஊக்கம் மற்றும் மனநிலையைக் கட்டுப்படுத்தும் லிம்பிக் அமைப்பு; மன அழுத்தத்திற்கு எதிர்வினையாக பயத்தை உருவாக்கும் அமிக்டாலா; மற்றும் நினைவுகள் உருவாவதிலும், மனநிலை மற்றும் ஊக்கத்திற்கும் முக்கிய பங்காற்றும் ஹிப்போகாம்பஸ் ஆகிய பகுதிகளும் உள்ளடங்கும்.

உடற்பயிற்சி மற்றும் மனநிலை

முறையான தினசரி உடற்பயிற்சியின் காரணமாக கிடைக்கும் உடல்நல பலன்களில், தினசரி வாழ்க்கையை ரசிப்பதில் உள்ள பின்வரும் தாக்கங்களும் உள்ளடங்கும்:

 • மேம்பட்ட உறக்கம்
 • உடல் உறவில் ஆர்வம் அதிகரிப்பது
 • மன அழுத்தத்திலிருந்து நிவாரணம்
 • மனநிலையில் மேம்பாடு
 • ஆற்றல் மற்றும் தாங்குதிறன் (ஸ்டாமினா) அதிகரிப்பது

எனவே, உங்கள் வாழ்க்கையில் கூடிய விரைவில் உடற்பயிற்சியைத் தொடங்கி விடுவது மிகவும் நல்லது, அதனால் நோய்களை நெருங்க விடாமல் நீங்கள் தடுக்க முடிவதோடு, மிகவும் சிறந்த வழியில் வாழ்க்கையை எதிர்கொள்ள தகுதியுடன் இருப்பீர்கள்!

பெரியவர்களுக்கான தினசரி உடற்பயிற்சி வழக்கத்திற்கான பரிந்துரைகளை‘ இங்கே காணலாம்

மேலும் இதையும் பார்க்கவும்:

உடற்பயிற்சியைத் தொடங்குவதற்கு முன்பு என்னென்ன உடல்நல பரிசோதனைகள் நீங்கள் செய்து கொள்ள வேண்டும்?

தொடக்கநிலை ஏரோபிக் பயிற்சிகள்

தாங்குதிறன் உடற்பயிற்சி: வீட்டில் எப்படி உடற்பயிற்சி செய்வது?

பார்க்கவும்: உடற்பயிற்சி பரிந்துரைகளுக்கான எங்கள் வளங்கள்