தாய்ப்பாலூட்டும் தாய்மார்களுக்கான FWI உணவுக் கட்டுப்பாட்டுத் திட்டத்தை இப்போது பெறவும் !

பிறந்த குழந்தைக்குத் தாய்ப்பாலே சிறந்த உணவு மற்றும் இந்தத் தரமான உணவின் ஒரே தயாரிப்பாளரான நீங்கள், உற்பத்தியைத் தக்கவைத்துக்கொள்ள எல்லாவற்றையும் செய்ய விரும்புகிறீர்கள்! அம்மா மற்றும் மாமியாரின் ஆலோசனைகளின் பேரில், நீங்கள் தேவைக்கு அதிகமாகச் சாப்பிடுவது, கர்ப்பக்காலத்தில் ஏற்பட்ட உங்கள் உடல் எடையை அப்படியே வைத்திருக்கலாம் அல்லது மோசமான நிலைக்கு அதிகப்படுத்தலாம்!

மேலும், கலோரிகள் மட்டுமல்லாமல் புரதங்கள், வைட்டமின்கள், தாதுக்கள் ஆகியவை கூடுதல் அளவுகளில் தேவைப்படுகின்றன. இந்த ஊட்டச்சத்துக்களின் சிறந்த மூலப்பொருட்கள் பால், காய்கறிகள், பழங்கள், டோஃபு மற்றும் முட்டை போன்ற ஆரோக்கியமான உணவுகள்தானே அன்றி ஒருபோதும் பஞ்ஜிரி/நெய்யில் செய்யப்பட்ட லட்டு போன்றவை அல்ல

உண்மையில், உங்கள் கர்ப்பக்காலத்தின் பிற்பகுதியில் உங்களுக்குத் தேவைப்படும் கலோரிகளையும், நீங்கள் தாய்ப்பாலூட்டுவதற்குத் தேவைப்படும் கூடுதல் கலோரிகளையும் ஒரு மேசைக்கரண்டி நெய்யிலிருந்தே நீங்கள் பெறமுடியும்

உங்கள் குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுக்கும் போது, ​​உங்கள் வழக்கமான உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டிய கூடுதல் உணவுக் கட்டுப்பாடுகள் என்ன என்பது பற்றிய அனைத்து விவரங்களும் கீழே உள்ள அட்டவணையில் தெளிவாகத் தெரிவிக்கப்பட்டுள்ளன

  தாய்ப்பால் கொடுக்கும் போது தேவைப்படும் கூடுதல் உணவு (கர்ப்பத்திற்கு முந்தைய உணவு மீதானது)
  ஊட்டச்சத்துக்கள் முதல் ஆறு மாதக் காலங்களில் (தாய்ப்பால் கொடுப்பதற்கான பிரத்யேக உணவு) முதல் ஆறு மாதங்களுக்குப் பிறகான காலங்களில் (பகுதியளவு தாய்ப்பால் கொடுப்பதற்கான பிரத்யேக உணவு)-
  கலோரிகள் 600 520
  புரதங்கள் 19 13
100% தேவைகள் அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்கள்    கால்சியம், வைட்டமின் சி
கிட்டத்தட்ட 50% தேவைகள் அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்கள்    வைட்டமின் ஏ, டி, , ஃபோலிக் அமிலம், வைட்டமின் பி12 மற்றும் வைட்டமின் பி6 மற்றும் நார்ச்சத்து
33% அல்லது அதற்கு குறைவான விகிதத்தில் தேவைகள் அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்கள்   இரும்புச்சத்து, வைட்டமின் பி1, பி2, பி3
கூடுதலாகத் தேவைப்படும் இந்தக் கலோரி மற்றும் புரதத்தை அளிக்கும் உணவு
 • கூடுதலாக ஒரு டம்ளர் பால் மற்றும்
 • கூடுதலாக ஒரு முறை கொட்டைகள் மற்றும்
 • கூடுதலாக ஒரு முறை தால்/இறைச்சி மற்றும்
 • கூடுதலாக ஒரு முட்டை/ 1/4  பகுதி டோஃபு அல்லது 30 கிராம் சோயா துண்டுகள் மற்றும்
 • கூடுதலாக 1 மேசைக்கரண்டி எண்ணெய்/நெய்

 கர்ப்பக்காலத்தின் மூன்றாவது மூன்று மாதங்களில் நெய்யும் எண்ணெயும் மட்டுமே கூடுதலாகத் தேவைப்படும்

 • கூடுதலாக ஒரு டம்ளர் பால் மற்றும்
 • கூடுதலாக ஒரு முறை கொட்டைகள் மற்றும்
 • கூடுதலாக ஒரு முறை தால்/இறைச்சி மற்றும்
 • கூடுதலாக ஒரு முட்டை/ 1/4  பகுதி டோஃபு அல்லது 30 கிராம் சோயா துண்டுகள் மற்றும்
 • கூடுதலாக 1/2 மேசைக்கரண்டி எண்ணெய்/நெய்

கர்ப்பக்காலத்தின் மூன்றாவது மூன்று மாதங்களில் நெய்/எண்ணெய் மட்டுமே கூடுதலாகத் தேவைப்படும்

தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்குத் தேவைப்படும் அனைத்து உணவுகளும் அடங்கிய ஒரு உணவுத் திட்டத்தை ஃபுட்வைஸ் கொண்டுள்ளது மற்றும்

 • பால் உற்பத்தியைப் பாதிக்காமல், ஆரோக்கியமான முறையில் உடல் எடையைக் குறைக்க வேண்டுமா வேண்டாமா என்பதை நீங்கள் தேர்வு செய்துகொள்ளலாம்
 • உங்கள் தேவைகள் பூர்த்தி செய்யப்படும் என்பதை உறுதிப்படுத்தும் வகையில் உங்களுக்கு ஒரு ஊட்டச்சத்து டாஷ்போர்டு காட்டப்படலாம்

பார்க்கவும்: தாய்ப்பாலூட்டும் போது கவனத்தில் கொள்ளவேண்டியவை குறித்த எங்களது மூல ஆவணங்கள்

தாய்ப்பாலூட்டும் தாய்மார்களுக்கான FWI உணவுக் கட்டுப்பாட்டுத் திட்டத்தை இப்போது பெறவும் !